ரீ என்ட்ரியில் பட்டையை கிளப்பும் நடிகர்.. விஜய் சேதுபதியவே போட்டிக்கு கூப்பிடும் பழைய சூப்பர் பீஸ்

தற்போது வருடத்திற்கு அசராமல் 10 முதல் 15 படங்கள் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. எப்படிதான் இந்த மனுஷனுக்கு மட்டும் கால்ஷீட் கிடைக்குது என பல நடிகர்கள் இவர் மீது பொறாமைப்படுகிறார்கள். இந்நிலையில் இவரை போலவே பழைய நடிகர் ஒருவர் பத்துப் பதினைந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ரஜினி, கமல் காலத்தில் இவரை ஹீரோவாக நடித்தாலும் இவருக்கு என்ற தனி ரசிகர் பட்டாளம் தற்போது வரை உண்டு. தற்போதும் சினிமாவில் செகண்ட் ரவுண்ட் இலும் ஒரு கை பார்த்து வருகிறார். சொல்லப்போனா மனுஷன் இப்போ உள்ள ஹீரோக்களுக்கே டஃப் கொடுப்பார் போல. அந்தளவுக்கு தன்னுடைய உடம்பை கட்டுக்கோப்புடன் இளமையாக வைத்திருக்கிறார்.

இவர் சிறிது காலம் அரசியலில் பணியாற்றினாலும் அங்கு இதற்கான நிலையான இடம் கிடைக்காததால் மீண்டும் ஒரு சினிமாவுக்கு வந்துள்ளார். சரத்குமார் தான் தற்போது கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார். இவருடைய சூரியவம்சம், நாட்டாமை படங்களை அளவும் ரசிகர்களால் மறக்க முடியாது.

தன்னுடன் நடித்த சீனியர் நடிகையான ராதிகாவை திருமணம் செய்து கொண்ட தனது வாழ்க்கையை சிறப்பாக நடத்திவருகிறார். இந்நிலையில் தற்போது விடியல், பொன்னியின் செல்வன், நான்கு வழிச்சாலை, நாநா, பரம்பொருள், மரங்கள் என பல படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதில் சில படங்களில் ஹீரோவாகவும் சரத்குமார் நடிக்கிறார். விஜய்யின் அப்பாவாக தளபதி 66 படத்திலும் சரத்குமார் நடிக்கயுள்ளார் என்ற செய்தியும் சமீபத்தில் வெளியாகி அவரது ரசிகர்களின் உற்சாகப்படுத்தியது. இதனால் சரத்குமார் அரசியலை காட்டிலும் முழு வீச்சாக சினிமாவில் இறங்கியுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு ரீ என்ட்ரியில் பட்டையை கிளப்பி வருகிறார் நம்ம சூப்பர் ஹீரோ. இதனால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு வரிசையாக சரத்குமாரின் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →