SK 21 படத்தில் இணையும் தனுஷ் பட நடிகை.. அப்போ ஒரு குத்தாட்ட இருக்கு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான் படம் திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன், ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் sk 21 படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கமலஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ளது.

தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இருவரும் விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள். ஆனால் இதுவரைக்கும் இருவரும் இணைந்து படத்தில் நடிக்கவில்லை.

தற்போது முதல்முறையாக இவர்கள் இருவரும் இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிவகார்த்திகேயனும் நன்றாக ஆடக்கூடிய நடிகர்களுள் ஒருவர். அதேபோன்று நடனத்தில் யாருக்கும் சளைக்காத நடிகை சாய்பல்லவியும் அற்புதமாக ஆடக்கூடியவர்.

இவர்கள் இருவரும் இணைவதால் கண்டிப்பாக இப்படத்தில் ஒரு குத்தாட்டம் இருக்கும் எனவும் கூறி வருகின்றனர். ஏற்கனவே சாய் பல்லவி மற்றும் தனுஷ் இருவரும் மாரி 2 திரைப்படத்தில் ஆடிய ரவுடி பேபி பாடல் சூப்பர் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் அனைவருடைய கால்களையும் ஆட்டம் போட வைத்தது.

அதே போன்று தற்போது sk 21 படத்திலும் சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி கம்போவில் நிச்சயம் ஒரு குத்தாட்ட பாடல் இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஆகையால் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் நிச்சயம் இவர்கள் இருவருக்கும் ஒரு பாடல் அமைக்க வேண்டும் எனவும் படக்குழு முடிவெடுத்துள்ளது.

மேலும் இந்த படம் தேசபற்று சம்பந்தப்பட்ட கதைக்களத்துடன் உருவாகும் என்றும், ராணுவ வீரன் சந்திக்கக் கூடிய முக்கியமான பிரச்சினையும் எடுத்துக்கூறும் அடுத்த துப்பாக்கி படத்தை போலவே இருக்கும் என்று படத்தின் ஒன்லைன் கதை சிவகார்த்திகேயன் ரசிகர்களால் இணையத்தில் பரவி வருகிறது.