புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வெளிவந்த சண்டையின் உண்மை ரகசியம்.. கன்னியாகுமரியில் சூர்யாவை திணற அடித்த பாலா!

நந்தா, பிதாமகன் படத்தை தொடர்ந்து சூர்யா மூன்றாவது முறையாக பாலா இயக்கத்தில் தன்னுடைய 41-வது படத்திற்கான படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் பாலா-சூர்யா இருவருக்கும் பெரிய சண்டை. அதனால் சூர்யா பாதியிலேயே சூட்டிங்கில் இருந்து எஸ்கேப் ஆகி விட்டார் என்றெல்லாம் ஒரு பேச்சு அடிபட்டது.

அதன் பின்னர் அது ஒரு கட்டுக்கதை என்றெல்லாம் கூறி வந்தனர். கன்னியாகுமரியில் வெயில் ஜாஸ்தி, அதனால் சூட்டிங்கை பாதி நினைத்து விட்டனர் என்றும், முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்ததால் சூர்யா பேக்கப் செய்து விட்டார் என்றெல்லாம் மூடி மறைத்தனர்.

இப்பொழுது அவர்கள் பிரச்சினையின் உண்மை பின்னணி வெளிவந்துள்ளது. கன்னியாகுமரியில் மொட்டை வெயிலில் சூர்யாவை ஓட வைத்திருக்கிறார் பாலா. சூர்யாவை ஒரு சேஸிங் சீனில் ஓட விட்டிருக்கிறார் பாலா. அந்த சீனை காலையில் ஆரம்பித்து மதியம் வரை எடுத்து இருக்கிறார்.

ரொம்ப களைப்பான சூர்யா காரில் ஏறி கிளம்பியுள்ளார். கேட்டதற்கு வயிறு வலிக்கிறது என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நாசுக்காக சென்றுவிட்டாராம். அதன்பின்னர் சூர்யா திரும்ப சூட்டிங் வரவே இல்லையாம்.

சூர்யா வராததால் வெயிட் பண்ணிய படக்குழு சாயங்காலம்தான் பேக்கப் செய்து இருக்கிறார்கள். பெரும்பாலும் இயக்குனர் பாலாவின் படத்தில் நடிக்கும் நடிகர்கள் வெயில், மழை, சேறு, சகதி, கரடுமுரடு என எதையும் பார்க்காமல் வெறித்தனமாகவே தன்னுடைய நடிப்பில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என இயக்குனர் பாலா நினைப்பார்.

அப்படி நடிக்காத நடிகர் நடிகைகளை உடனே தூக்கி எறியவும் பாலா தயங்க மாட்டார். எனவே எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் கண்டிப்பாக நடந்து கொள்ளும் பாலாவின் அழிச்சாட்டியம் பொறுத்துக் கொள்ள முடியாமலேயே சூர்யா கடுப்பில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கிளம்பி விட்டார் போல.

Trending News