வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஒத்த போட்டோ போட்டு கேரியரை முடித்துக்கொண்ட குக் வித் கோமாளி பிரபலம்.. சோலி முடிஞ்சு!

விஜய் டிவியில் கடந்த இரண்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து, மூன்றாவது சீசனை துவங்கியிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து, அவர்களின் மிகவும் பிடித்தமான என்டர்டைன்மென்ட் ஷோவாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் குக்குகளும், கோமாளிகளும் எளிதில் பிரபலமடைந்து சினிமாவிலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுகின்றனர்.

அந்த வகையில் சினிமாவில் ஒரு காலத்தில் டாப்பில் இருந்த நடிகர், நடிகைகளும் மீண்டும் தங்களது கேரியரை துவங்க ஆசைப்பட்டு வருகின்றனர். அப்படித்தான் முதல் சீசனில் வனிதா, இரண்டாவது சீசனில் ஷகிலா, தற்போது மூன்றாவது சீசனில் காலடி வைத்திருக்கும் ஸ்ருதிகா அர்ஜுன். ஸ்ருதிகா ஏற்கனவே கடந்த 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்து, அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்திருப்பார்.

என்னதான் இவர் மறைந்த நகைச்சுவை நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்றாலும், அவரால் எதிர்பார்த்த அளவு முன்னணி நடிகையாக வராததால் படவாய்ப்புகளும் குறைந்தது. இதனால் சினிமாவை விட்டு விலகிய ஸ்ருதிகா, அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, அவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

எனவே மீண்டும் தன்னுடைய சினிமா கேரியரை துவங்க ஆசைப்பட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய கொஞ்சம் பேசினால் எக்கச்சக்கமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் ஒரு போட்டோவால் இனி அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக தெரிகிறது.

ஏனென்றால் அந்தப் புகைப்படத்தில் ஸ்ருதிகாவிற்கு வளகாப்பு நடத்தப்படாது போன்ற புகைப்படம் தான் அது. இதனால் ரசிகர்கள் ஸ்ருதிகா மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்பதால் அவர் இனி குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் இருக்க மாட்டார் எனப் புரிந்து கொண்டனர்.

ஆனால் இந்த புகைப்படம் ஸ்ருதிகா பல ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மகன் வயிற்றில் இருக்கும் போது எடுக்கப்பட்டதாகவும். அன்னையர் தினத்தை முன்னிட்டு இந்த புகைப்படத்தை பதிவிட்டதாகவும் விலகும் தெரிவித்துள்ளார்.

Shrutika
Shrutika

Trending News