புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கோலிவுட்டின் 6 டாப் ஹீரோக்கள் வாங்கும் சம்பளம்.. ரஜினி சம்பளத்தை அசால்டாக தொட்ட அஜித்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ரஜினி, கமல் இருவரும் தான். பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக விஜய், அஜித் இருவரும் ஏராளமான ரசிகர்களைப் பெற்று மாஸ் நடிகர்களாக வலம் வருகின்றனர்.

இப்படி மிகப் பிரபலமாக இருக்கும் இவர்களை வைத்து படம் தயாரிப்பதற்கு பல தயாரிப்பாளர்களும், முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் இவர்கள் கேட்கும் கோடிக்கணக்கான சம்பளங்களை அள்ளி கொடுப்பதற்கு பல கார்ப்பரேட் கம்பெனிகள் தயாராக இருக்கின்றன.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் அஜித், ரஜினி, கமல் போன்ற அனைவரையும் பின்னுக்குத்தள்ளி நடிகர் விஜய் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அதன்படி அவர் தற்போது ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 118 கோடி ரூபாயாக உள்ளது. இதை அடுத்து 2-ம் இடத்தில் நடிகர் அஜித் இருக்கிறார். அவர் பிரபல நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அந்தப் படத்திற்காக அவருக்கு 105 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அஜித் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இதையடுத்து ரஜினியும் 105 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் கமல்ஹாசன் 35 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்.

இவர்களுக்கு அடுத்து சூர்யா 28 கோடி ரூபாய் சம்பளம் பெற்று நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இறுதியாக சிவகார்த்திகேயன் 25 கோடி ரூபாய் சம்பளம் பெற்று ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். டாக்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தான் அவருடைய சம்பளம் எக்கச்சக்கமாக ஏறியுள்ளது.

சமீபகாலமாக தமிழ் சினிமாவின் மார்க்கெட் கொடிகட்டிப் பறப்பதால் தான் நடிகர்களின் சம்பளமும் இப்படி எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது. அதற்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகையும் ஒரு காரணமாக இருக்கிறது. மேலும் தன்னுடைய படங்களின் மூலம் அதிக கலெக்ஷனை பெற்று மாஸ் நடிகராக வலம் வரும் விஜய் தற்போது பாக்ஸ் ஆபீஸ் நாயகனாகவும் உருவெடுத்துள்ளார்.

Trending News