திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அடைத்து வைத்து கொடுமை.. வசமாக சிக்கிய நடிகை மும்தாஜ்

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி பின்னர் கவர்ச்சி நாயகியாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மும்தாஜ். கவர்ச்சியாக பல திரைப் படங்களில் நடித்திருக்கும் இவர் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடனம் ஆடியிருக்கிறார்.

அந்த வகையில் மிகவும் பிரபலமாக இருந்த இவருக்கு புது புது நடிகைகளின் வரவால் சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. அந்த சமயத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். அங்கு அவருடைய முரட்டுத்தனமான நடவடிக்கை ரசிகர்களுக்கு சிறு எரிச்சலை ஏற்படுத்தியது.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு படவாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. அதனால் அவர் தற்போது தன் சகோதரியுடன் அண்ணா நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் வேலை செய்த இரண்டு சிறுமிகள் அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அதில் அவர்கள் கடந்த 6 வருடமாக மும்தாஜின் வீட்டில் வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் மும்தாஜ் தங்களை கொடுமைப்படுத்துவதாகவும், சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று கேட்டால் அனுப்ப மறுப்பதாகவும் அவர்கள் அங்கு இருந்தபடியே போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் புகாரை ஏற்ற போலீஸார் உடனே மும்தாஜின் வீட்டிற்கு விரைந்து சென்று சிறுமிகளை மீட்டுள்ளனர். தற்போது சிறுமிகள் இருவரும் ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மன ரீதியாக ஏதும் பாதிப்பு இருக்கிறதா அல்லது உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து நடிகை மும்தாஜிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர். மேலும் மும்தாஜ் குறித்து பல விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. மைனர் பெண்களை வேலைக்கு வைப்பது தவறு என்று உங்களுக்கு தெரியாதா என மும்தாஜுக்கு எதிராக தற்போது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News