செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

தளபதிக்கு ஒரு ரசிகனா பயங்கரமா செய்வேன்.. அனிருத்தை அசர வைக்கப்போகும் பிரபலம்

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். நெல்சன் இயக்கத்தில் உருவான அனைத்து படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். அந்தப் பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பரவி ஹிட் கொடுத்தது.

இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து நெல்சன் இயக்கும் தலைவர் 169 படத்திலும் அனிருத் தான் இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 66 படத்தில் தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் 6 பாடல்கள் இடம் பெற உள்ளது. அதில் ஒன்று எமோஷன் கலந்த சென்டிமென்ட் பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் விஜய் இப்படத்தில் ஒரு பாடல் பாட உள்ளார். சமீபத்தில் பீஸ்ட் படத்தில் வெளியான அரபிக் குத்து மற்றும் ஜாலியா ஜிம்கானா பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் பல வருடமாக விஜய்யின் படத்திற்கு இசையமைக்க காத்திருந்த தமன் இப்படத்தில் பட்டையைக் கிளப்பயுள்ளார்.

மேலும் தமன் ஒரு விஜய் ரசிகர். இதனால் அனிருத்தை விட தான் படத்தில் சிறப்பாக இசை அமைப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் இப்போது என்னுடைய நேரம், அதனால் இனிமேல் என்னுடைய இசையில் விஜய்யும் பாடல்கள் இணையத்தில் பயங்கரமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக விஜய் தமனுக்கு வாய்ப்பளித்து இருப்பதால், இந்த கூட்டணியில் உருவான பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தால் தொடர்ந்து விஜய் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு தமனுக்கு கிடைக்கும்.

இதனால் தளபதி 66 படத்தில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார் தமன். விஜய்யின் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்டு வரும் நிலையில் அதே பாணியில் உருவாகும் தளபதி 66 படத்தின் பாடல்களும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News