சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கேஜிஎப் 2ல் மறைக்கப்பட்ட உண்மை.. பிரபல நடிகரை வைத்து சொல்லப்போகும் பா ரஞ்சித்

சமீபத்தில் யாஷ் நடிப்பில் கேஜிஎப் 2 படம் வெளியாகி சக்கைபோடு போட்டு போட்டது. வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல லாபம் பார்த்துள்ளது. ஆனால் இப்படத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கோலார் கோல்டு பீல்டு அங்கே என்ன இருக்கிறது, என்ன நடக்கிறது.

எவ்வளவு உயிர் பலி வாங்கியது, என்றெல்லாம் இந்தப்படத்தில் தெளிவாக சொல்லவில்லை பல உண்மைகளை மறைத்துள்ளனர். இந்நிலையில் இப்பொழுது இதைப் பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார் பா ரஞ்சித். கபாலி, சார்பட்டா பரம்பரை போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் ரஞ்சித்.

கேஜிஎஃப் படத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளை நாம் சொல்லுவோம் என்று கதையை தயார் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதில் இங்கே இருக்கும் தங்கத்தை யார் கண்டுபிடித்தது. எந்தெந்த ஊர்களுக்கு அதை கடத்துகிறார்கள் என்ற உண்மையை தெளிவுபட கூற இருக்கிறார் ரஞ்சித்.

அதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் ஹீரோ தான் விக்ரம். தற்போது விக்ரம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் விக்ரமின் 61வது படத்தை பா ரஞ்சித் இயக்கயுள்ளார். இந்த படத்தின் மூலம் பல உண்மை சம்பவங்கள் வெளிவர காத்திருக்கிறது.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கயுள்ளார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா இப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் பா ரஞ்சித் உடன் விக்ரம் இணையும் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.

Trending News