சினிமா செய்திகள்

நன்றி மறந்த ரஜினியின் குடும்பம்.. தலைவரே நீங்களே இப்படி செய்யலாமா.!

By Vijay · 17 மே 2022

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் உடல்நல குறைவின் காரணமாக தற்போது வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. புகைப்பழக்கம், மது அருந்துதல் போன்ற பழக்கங்களால் அவருக்கு கிட்னி பிரச்சனையும் ஏற்பட்டது.

அப்போது அவருக்கு விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் பலரும் வேண்டுதல் வைத்து வந்தனர். அந்த சமயத்தில் சஞ்சய் என்பவருடைய கிட்னி ரஜினிக்கு பொருத்தப்பட்டது. அதன் பிறகு ரஜினியை பூரண குணமடைந்து மீண்டும் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதிலிருந்து சஞ்சய் ரஜினி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான நபராக மாறினார்.

சொல்லப்போனால் ரஜினியை சந்திக்க வரும் முக்கிய பிரபலங்கள் கூட இவரை சந்தித்த பிறகுதான் ரஜினியை பார்க்க முடியும். அந்த அளவுக்கு அவர் ரஜினியின் குடும்பத்துக்கு முக்கியமான நபராக இருந்தார். பல விஐபி பிரபலங்களின் நம்பர் கூட அவரிடம் தான் இருக்கும்.

இப்படி ரஜினிக்கு எல்லாமுமாக இருந்த சஞ்சய் தற்போது சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தை விட்டு விலகி இருக்கிறார். ஏதோ சில பிரச்சினையின் காரணமாக ரஜினியின் குடும்பத்தினர் அவரை முற்றிலுமாக விலக்கி வைத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால் அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பது யாருக்கும் தெளிவாக தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் ஒரு முக்கியமான பிரச்சினையில் உதவி செய்தவரை ரஜினியின் குடும்பத்தினர் விலக்கி வைத்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரஜினியும் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.