பொதுவாக விஐபிகள் தங்களுக்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள் வைத்திருப்பது வாடிக்கையான ஒன்றுதான். அதேபோல தற்போது தமிழ் சினிமாவில் அதிகமான சிம் கார்டுகளை மாற்றி பயன்படுத்துபவர்களில் முதலிடத்தில் உள்ளவர் அஜித் குமார். அவர் ஏன் இப்படி சிம் கார்டுகளை அடிக்கடி மாற்றி வருகிறார் என்பதை குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
அஜித் குமார் தற்போது பல திரைப்படங்களில் நடித்து பிசியாக வலம் வருகிறார். இவரது திரைப்படங்களைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் கூட்டம் என்ற அளவில் குவிந்து கொண்டிருக்கிறது. மேலும் திரைக்குப் பின்னாலும் அஜித் தன்னால் இயன்ற உதவிகளையும் பிற நடிகர்களுக்கு மறைமுகமாக வாய்ப்புகளையும் வழங்கி வருகிறார்.
இதனிடையே அஜித்தின் செல்போன் எண் கிடைத்தால் ஒரு சில நடிகர் நடிகைகள் அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தல அஜித்திற்கு இரவு, பகல் என்று பாராமல் கால் செய்து வாய்ப்புகளை கேட்டு வருகிறார்களாம். இதனால் கடுப்பான அஜித் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒவ்வொரு சிம் கார்டுகளை மாற்றி வருகிறாராம்.
ஏனென்றால் ஒரு படத்தில் கமிட்டாகி விட்டால் நடிகர்களின் செல்போன் எண்களை இயக்குனர்கள் மற்றும் சக நடிகர்கள் வாங்கிக் கொள்வார்கள். அப்படி அஜித்தின் செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டு பலருக்கும் ஷேர் செய்யப்பட்டு வருகிறதாம். இதனால் தல அஜித்திற்கு அதிக கால்கள் வருவதால் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒவ்வொரு சிம் கார்டு என முடிவு செய்து உள்ளார் அஜித். .
மேலும் அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதுமே அமைதியான ஒரு நபராக தென்படுவார் என சக நடிகர் நடிகைகள் தெரிவித்துள்ளனர். அஜித் யாரிடமும் பேசமாட்டார், அப்படி பேசினால் கண்டிப்பாக தன்னுடைய நேரடியான பேச்சையே பேசுவாராம். மேலும் யாரேனும் உதவி கேட்டால் அவரால் செய்ய முடிந்தால் மட்டுமே அவர்களுக்கு உறுதி அளிப்பார். இல்லை என்றால் அவர்களிடம் தன்னால் இயலாது என்று நேரடியாக சொல்லிவிடுவார்.
இதுதான் அஜித்தின் உண்மையான குணம். இதேபோல ரசிகர்களுக்கும் அதிகப்படியான கோரிக்கைகளை வைத்தவர் அஜித் தான். தன்னை தல என அழைக்காதீர்கள் அஜித்குமார் என்றே அழையுங்கள் என்றும் மேலும் தன்னுடைய படங்களுக்காக ரசிகர்கள் தேவையில்லாத செலவுகளை செய்யாதீர்கள் என்றும் ரசிகர்களுக்காக தல அஜித் இது போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.