ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஆதிரா போல் கலக்கப்போகும் கமல்.. ஆண்டவருக்காக காத்துக் கொண்டிருக்கும் பெரிய திமிங்கலம்

விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக சினிமாவில் கமலஹாசனின் பங்கு எதுவும் இல்லாமல் இருந்தது. முழுநேரமாக அரசியலில் செயல்பட்டு வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தார்.

இதனால் இப்படியே இருந்தால் வேலைக்காவாது என அரசியல், பிக் பாஸ் இந்த இரண்டையும் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவில் அதிரடியாக இறங்கியுள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.

வருகிற ஜூன் 3 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் எங்கு பார்த்தாலும் எப்போதும் கமலஹாசன் பேச்சுதான் அடிபடுகிறது. இப்படத்தில் கமலஹாசன் ஏதோ மிகப் பெரிய சம்பவம் செய்யப்போகிறார் என்று தோன்றுகிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கமல்ஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதுதவிர வருஷத்துக்கு ஆறு, ஏழு படங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது இளம் நடிகரான சிவகார்த்திகேயன் படத்தை இயக்கயுள்ளார்.

இவ்வாறு கமலஹாசன் முழு வீச்சில் சினிமாவில் இறங்கியுள்ளார். இந்நிலையில் இப்போது ஒரு பெரிய திமிங்கலம் கமலுக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறார். அதாவது கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் படத்தில் கமலஹாசன் நடிக்கவுள்ளார். கே ஜி எஃப் படம் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை பெற்றது.

இந்நிலையில் பிரசாந்த் நீல் தற்போது ஜூனியர் என்டிஆர் ஐ வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் கமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். பிரசாந்த் நீல் தற்போது கமலின் கால்ஷீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். மேலும் கே ஜி எஃப் படத்தில் ஆதிரா போல் கமலுக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது என்பது தற்போது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

Trending News