சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்தும் ஹீரோயினாகவே நடித்து வருபவர் திரிஷா. அவருடைய இளமையான தோற்றம் மற்றும் அழகு தான் இதற்கு முக்கிய காரணம். மேலும் தமிழ் சினிமாவில் அவருடைய கதாபாத்திரங்களும் வலுவாக இருந்துள்ளது. அவ்வாறு திரிஷாவின் அசத்தலான அத்த கதாபாத்திரங்களை தற்போது பார்க்கலாம்.
மௌனம் பேசியதே : சூர்யா, திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் மௌனம் பேசியதே. இப்படத்தில் சந்தியா என்ற கதாபாத்திரத்தை திரிஷா ஏற்று நடித்திருந்தார். இப்படத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். இப்படத்தில் கடைசியாக கேமியோ தோற்றத்தில் லைலா நடித்திருந்தார்.
சாமி : ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் சாமி. இப்படத்தில் புவனா என்ற துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிராமண குடும்பத்தின் பெண்ணாக தத்ரூபமாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற பாடலில் இவருடைய நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கில்லி : தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் கில்லி. கபடி மையமாக வைத்து எடுக்கப்பட்ட இடம் ஒரு பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்தார். பிரகாஷ்ராஜிடம் இருந்த காப்பாற்றிய விஜய்யை பிரிய முடியாமல் தவிக்கும் திரிஷாவின் நடிப்பு அபாரம்.
உனக்கும் எனக்கும் : ஜெயம் ரவி, பிரபு, திரிஷா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் உனக்கும் எனக்கும். இப்படத்தில் கவிதா என்ற கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் அண்ணனின் பாசத்திற்கும், காதலுக்கும் நடுவே போராடும் பெண்ணாக இப்படத்தில் திரிஷா நடித்திருந்தார்.
அபியும் நானும் : ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா, திரிஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் அபியும் நானும். இப்படத்தில் பிரகாஷ்ராஜ் என் செல்ல மகளாக அபி என்ற கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்தார். இப்படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் திரிஷா இருவரின் நடிப்பும் தத்ரூபமாக இருக்கும்.
விண்ணைத்தாண்டி வருவாயா : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்தில் திரிஷாவின் கீழ் வீட்டில் குடியிருக்கும் வீட்டின் பின் சிம்புக்கு இவர் மீது காதல் ஏற்படுகிறது. சிம்புவின் இயக்குனராகும் கனவும் அவருடைய காதல் கை கைகூடுகிறது என்பதை இப்படத்தின் கதை. மேலும் இப்படத்தில் ஜெஸ்ஸி என்ற கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்தார்.
மங்காத்தா : வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் மங்காத்தா. இப்படத்தில் த்ரிஷா சஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மறைமுகமாக ஜெயப்பிரகாஷ் நெருங்க திரிஷாவை அஜித் பயன்படுத்திக் கொள்வார். திரிஷாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
என்னை அறிந்தால் : திரிஷா மற்றும் அஜித் நான்காவது முறையாக ஜோடி சேர்ந்த நடித்த படம் என்னை அறிந்தால். கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஒரு பெண் குழந்தையுடன் தனித்து இருக்கும் பரதநாட்டிய கலைஞராக ஹேமானிகா என்ற கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்தார். அஜித்துடன் அவருடைய காதல் அவ்வளவு தத்ரூபமாக இருந்தது.
கொடி : தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் கொடி. இப்படத்தில் திரிஷா பதவிக்காக எதையும் செய்யத் துணியும் ருத்ரா என்ற துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் திரிஷா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
96 : பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. திரிஷாவின் திறமைக்கு சரியான படமாக அமைந்தது இப்படம். இப்படத்தில் ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் முழுக்க திரிஷா இரண்டே ஆடையில் தான் காட்சி அளித்திருந்தார். சிம்பிளான தோற்றத்தில் நடிப்பில் மொத்த காதலையும் இறக்கியிருந்தார்.