புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய்க்காக பல வருடமாக தவமிருக்கும் கேஎஸ் ரவிக்குமார்.. இந்த ஸ்டைல ஒரு படம் கன்ஃபார்ம்

தமிழில் பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவர் தான் இயக்கும் படங்களில் கண்டிப்பாக ஒரு சில காட்சிகளில் தோன்றுவார். இந்நிலையில் 1999 இல் விஜய் வைத்த மின்சார கண்ணா என்ற படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார்.

அதுவரை ஆக்ஷன் காட்சிகளில் மட்டுமே நடித்திருந்த விஜய் காமெடியிலும் கலக்குவார் என ரசிகர்களுக்கு தெரியவந்தது இந்த படம் மூலம்தான். இப்படத்திற்கு பிறகு விஜய்யின் படங்களில் அதிக காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதுவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் கே எஸ் ரவிகுமார் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் விஜயுடன் மீண்டும் படம் பண்ண ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார். அதுவும் இவர் இயக்கத்தில் ரஜினிக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படையப்பா போன்ற ஒரு கதையை வைத்துள்ளார்.

விஜய் மட்டும் ஓகே என்று சொன்னால் உடனே இப்படத்தை ஆரம்பிக்க தயார் என கேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார். ஆனால் விஜய் இது போன்ற கதைகளில் இப்போது நடிப்பாரா என்பது சந்தேகம்தான். மேலும் தற்போது புது இயக்குனர்களுக்கு விஜய் வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

பீஸ்ட படத்திற்கு பிறகு தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் இணைய உள்ளார். இவ்வாறு விஜய் தனது அடுத்தடுத்த பட வேலைகளில் பிசியாக உள்ளார்.

இதனால் கேஎஸ் ரவிக்குமாருக்கு விஜய் படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவர் படத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என நம்புவதாக கூறியுள்ளார். ஏற்கனவே மின்சார கண்ணா படத்தில் நடித்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை விஜயின் படத்தில் நடிக்க ஆசையாக உள்ளதாக அந்த பேட்டியில் கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

Trending News