ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.. தளபதி விஜயின் அரசியல் பயணம் ஸ்டார்ட்

தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தில் தளபதி விஜய் உள்ளார். இதனிடையே தமிழ் சினிமாவின் தூணாக உள்ள தளபதி விஜய் சமீபத்தில் தெலுங்கானா முதலமைச்சரை சந்தித்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து தற்போது தளபதி விஜய் அரசியல் ரீதியாக இந்த சந்திப்பினை மேற்கொண்டுள்ளார் என்ற செய்தி பரவலாக வெளியாகியுள்ளது.

பொதுவாகவே தளபதி விஜயின் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களிலும் அரசியல் வசனங்கள் அல்லது காட்சிகள் இடம்பெறுவது வழக்கமான ஒன்றுதான். இதை முன் வைத்து தளபதி விஜய் கண்டிப்பாக அரசியலில் கால்பதிப்பார் என பல தரப்பினரும் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் எனும் கட்சியை உருவாக்கி சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், இந்த கட்சி சார்பாக தேர்தலில் நின்ற பல உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.

இதனிடையே தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 திரைப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஹைதராபாத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் மத்திய அமைச்சர் சந்தோஷ் ஆகியோரை தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வம்சி பைடிபல்லி சந்தித்து பேசினார்.
இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.,

இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என பலரும் சொல்லி வந்தனர். ஆனால் இந்த சந்திப்பு அரசியல் ரீதியானது தான் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் அதே ஹைதராபாத்தில் தான் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆனால் அஜித் தெலுங்கானா முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்க வில்லை.

இதனிடையே தற்போது தளபதி விஜய் சந்தித்திருக்கிறார் என்றால் கண்டிப்பாக இது அரசியல் ரீதியான சந்திப்பு தான் எனவும் ஏற்கனவே புதுவை முதலமைச்சர் மற்றும் பிரஷாந்த் கிஷோர் உள்ளிட்டோரை சந்தித்து தளபதி விஜய் அரசியல் ரீதியாக ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் தெலுங்கானா முதலமைச்சரை சந்தித்து அரசியல் ரீதியாக தான் சந்தித்திருப்பார் எனவும்கூடிய விரைவில் படங்களை எல்லாம் முடித்துவிட்டு தளபதி விஜய் அரசியலில் முழு நேரம் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது விஜய் ரசிகர்கள் தளபதி 66 திரைப்படத்திற்கான அப்டேட்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →