சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

சித்ராவின் தற்கொலையை பற்றி கூறிய ஓய்வு பெற்ற காவல் அதிகாரி.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்

சின்னத் திரையில் பிரபலமாக இருந்த நடிகை சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். கிட்டத்தட்ட சித்ரா இறந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த வழக்கில் பல விஷயங்கள் மர்மமாகவே இருக்கிறது.

சித்ராவின் மரணத்திற்கு அரசியல் புள்ளிகள் தான் காரணம் என்று அவருடைய கணவர் ஒரு பக்கம் பேட்டி கொடுத்து வருகிறார். மறுபக்கம் சித்ராவின் பெற்றோர் ஹேம்நாத் தான் சித்ராவை அடித்து கொலை செய்து விட்டார் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

மேலும் இறந்துபோன சித்ராவின் உடலில் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும், இதற்கு ஹேம்நாத் தான் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் இந்த வழக்கை தீர விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் முதல்வரிடம் மனு கொடுக்க தயாராகி உள்ளனர்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜன் சித்ரா மரணம் சம்மந்தப்பட்ட சில திடுக்கிடும் தகவல்களை கூறி இருக்கிறார். அதாவது ஹேம்நாத் சூளைமேட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தான் தங்கள் திருமணம் நடைபெற்றதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அப்படி ஒரு ஹோட்டல் அங்கு கிடையாது. இது பற்றி சில மாதங்களுக்கு முன்பு சித்ராவின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்து இருக்கின்றனர். ஆனால் காவல்துறை ஹேம்நாத்துக்கு ஆதரவாக இருந்து கொண்டு தகவல்களை மறைக்கின்றனர்.

சித்ராவின் இறப்பு சம்பந்தப்பட்ட பல தகவல்கள் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. மேலும் அவர் மரணமடைந்த அன்று கைரேகை நிபுணர்கள் விசாரிக்கவில்லை. அந்த இடத்தில் இருந்து எந்த கைரேகையை ஆதாரங்களும் கைப்பற்றப் படவில்லை.

இதிலிருந்தே இந்த வழக்கில் சரியான விசாரணை நடத்தப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதுபோன்று ஹோட்டல்களில் ஏதாவது மரண சம்பவம் நடந்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் சிசிடிவி காட்சிகளை உடனே அழித்து விடும். அதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.

அப்போதுதான் இந்த மரணத்தில் இருக்கும் பல மர்மங்களும் வெளிவரும். அதுமட்டுமல்லாமல் சித்ராவுக்கு நீதி கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் சட்டமும், அதிகாரமும் எதற்கு என்று அவர் ஆளும் கட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் சித்ராவின் தற்கொலை வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது.

- Advertisement -spot_img

Trending News