ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ஹேண்ட்சம் லுக்கில் இருக்கும் தளபதி விஜய்.. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிக்கும் தளபதி 66 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன், குறுந்தாடி, கண்ணாடி என்று அசத்தலாக இருக்கும் அவருடைய போட்டோ ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிப்பதாக சொல்லப்பட்டது அதில் ஒரு கேரக்டர் இந்த லுக்கில்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இப்போது வெளியாகியுள்ள இந்த போட்டோவில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் விஜய் உடன் இருக்கின்றனர். அதில் பிரகாஷ்ராஜ் பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

thalapathy66
thalapathy66

கில்லி, சிவகாசி, போக்கிரி, வில்லு போன்ற பல திரைப்படங்களில் விஜய் மற்றும் பிரகாஷ்ராஜின் கூட்டணி ரசிகர்களை கவர்ந்தது. அந்த வகையில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படமும் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.

அதுமட்டுமல்லாமல் பல முன்னணி நட்சத்திரங்களும் இந்த படத்தில் இணைந்து நடித்து வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் தளபதியின் லேட்டஸ்ட் லுக்கும் ரசிகர்கள் பலருக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்த போட்டோவை விஜய் ரசிகர்கள் தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News