திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

அண்ணிக்கு ஆறுதலாக இருக்கும் பிரபல நடிகர்.. இது தான் எல்லாத்துக்கும் காரணம்

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் அந்த நடிகை. முதல் படம் என்று நம்ப முடியாத அளவுக்கு பல உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் அவர் தத்ரூபமாக நடித்து இருந்தார். இதனால் அவர் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இப்படி பிரபலமாக இருக்கும் போதே தன் முதல் பட இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் அதன் பிறகு குடும்ப வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். ஆனால் சில மாதங்களிலேயே கணவரின் போக்கு பிடிக்காமல் விவாகரத்து செய்து கணவரை விட்டு பிரிந்தார்.

அந்த சமயத்தில் அவருக்கு கணவரின் தம்பியான அந்த பிரபல நடிகர் தான் முழு ஆதரவு கொடுத்து உள்ளார். சொல்லப்போனால் தற்போது கணவரை விட்டு பிரிந்து இருக்கும் நடிகைக்கு அந்த நடிகர் தான் எல்லா விதத்திலும் உதவி செய்து வருகிறாராம்.

அதன் மூலம் அந்த நடிகையும் தற்போது ஓரிரு திரைப்படங்களில் தலை காட்ட ஆரம்பித்துள்ளார். இதில் இன்னொரு விஷயமும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது அந்த நடிகர் சமீபத்தில்தான் தன் மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தார்.

பெரிய இடத்து மாப்பிள்ளையாக இருக்கும் அவர் இப்படி ஒரு முடிவெடுத்தது பல சர்ச்சைகளை கிளப்பியது. ஏற்கனவே நடிகரைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள் பரவியது. இதில் அவர் அண்ணி நடிகைக்கு ஆறுதலாக இருப்பதுதான் குடும்பத்தில் பிரச்சினைகள் உருவாக காரணம் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மனைவி ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் தான் நடிகரை பிரிந்து விட்டாராம். இப்படி எல்லா பக்கமும் பெயரை டேமேஜ் செய்து கொண்ட நடிகர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Trending News