செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

செஞ்சிட்டா போச்சு! அட்லீ போட்ட ஒரு ட்வீட், விஜய் ரசிகர்கள் செம ஹாப்பி

அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து லயன் என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனர் அறிமுகமாகி மிகக்குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்து உள்ளார். இந்நிலையில் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கியுள்ளார்.

இதற்கு காரணம் முதல் படம் மிகப் பெரிய வெற்றி அடைய அடுத்தடுத்த படங்களுக்கு இதே கூட்டணி உருவானது. அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். தந்தையாகவும், இரட்டை சகோதரர்களாகவும் விஜயின் மாறுபட்ட கதாபாத்திரங்கள் பலராலும் கருதப்பட்டது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து உருவான படம்தான் பிகில். இப்படத்தில் வயதான கதாபாத்திரத்தில் ராயப்பன் ஆகவும், அவர் மகன் மைக்கேல் என இரு வேடங்களில் விஜய் நடித்து இருந்தார். இதில் ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

விஜய் வயதான தோற்றத்தில், திக்கி திக்கி பேசும் வசனங்களும், சண்டை காட்சிகளும் வரும்போது திரையரங்குகளில் கரவொலி எழும்பியது. ஆனால் பிகில் படத்தில் ராயப்பன் கதாபாத்திரம் சில காட்சிகள் மட்டுமே இடம்பெற்று இருக்கும். இந்நிலையில் ராயப்பன் கதாபாத்திரத்தை மட்டும் தனியாக வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்து இருந்தனர்.

தற்போது அதையே அமேசான் பிரைம் வீடியோ தங்களது ட்விட்டர் பக்கத்தில், பிகில் படத்தில் ராயப்பன் வரும் காட்சியை பதிவிட்டு, ராயப்பனின் கதைக்காக மட்டுமே எடுக்கப்பட்ட முழுப் படத்தையும் கற்பனை செய்து பாருங்கள் என குறிப்பிட்டு இருந்தனர். இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

atlee-twit
atlee-twit

அட்லியும் இந்த ட்விட்டை கவனித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செஞ்சிட்டா போச்சு என ரீட்வீட் செய்துள்ளார். இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் உள்ளனர். இதனால் ராயப்பன் கதாபாத்திரத்தை முழுநீள படமாக அட்லி எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Trending News