திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

பேராசை, கேடுகெட்ட பழக்கத்தால் உயிரை விட்ட இளம் நடிகை.. பூதாகரமாக கிளம்பிய பிரச்சனை

சிறிது காலம் அமைதியாக இருந்த சின்னத்திரை நடிகையின் தற்கொலை வழக்கு தற்போது வேறு ரூட்டுக்கு மாறியுள்ளது. ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட அந்த நடிகை திடீரென தற்கொலை செய்துகொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவருடைய மரணத்திற்கு இதுதான் காரணம் என்று ஆளாளுக்கு ஒரு கதையைச் சொல்லி பிரபலமாகி வந்த நிலையில் நடிகையின் நெருங்கிய தோழி யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பல தகவல்களை வெளியிட்டார். இதனால் ஒட்டுமொத்த மீடியாவும் நடிகையிடம் பல கேள்விகளை சரமாரியாக கேட்கத் தொடங்கியது.

அது அனைத்துக்கும் பொட்டில் அடித்தாற் போன்று தைரியமாக பேசி வந்த அந்த தோழி நடிகை தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறாராம். கடந்த சில வாரங்களாகவே நடிகையின் நடத்தை குறித்தும், குறுகிய காலத்திலேயே அவர் எப்படி இவ்வளவு பணம் சம்பாதித்தார் என்றும் பல செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதற்கு ஏற்றார்போல் நடிகையின் கணவரும், தோழியும் மாறி மாறி பல விஷயங்களை கூறி வந்தனர். மேலும் நடிகையின் கணவருக்கு எதிராக பல விசயங்களை கூறிவரும் அந்த தோழி ஆதாரங்களை மட்டும் காட்டுவதற்கு மறுத்து வருகிறார்.

இதனால் அவர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், அவருக்குப் பின்னால் சிலர் இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் நடிகையின் மரணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நாம் எதிர்பார்க்காத பல விஷயங்களும் இருக்கிறதாம்.

அதனால்தான் நடிகையின் பெற்றோர்களே சில விஷயங்களில் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதைத் தெரிந்து கொண்ட அந்தத் தோழி தற்போது நடிகை விஷயத்தில் அதிகம் மூக்கை நுழைக்காமல் எப்படி எஸ்கேப் ஆவது என்ற யோசனையில் இருக்கிறாராம்.

நடிகையைப் பற்றி தெரிந்த பல பிரபலங்களும் இந்த விஷயத்தில் தலையை கொடுத்தால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அமைதியாக இருந்து வருகிறார்கள். அதை லேட்டாக புரிந்து கொண்ட அந்த தோழி நடிகை இப்போது தன்னுடைய போன் நம்பரை மாற்றி விட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

எப்படி இருந்தாலும் உண்மை ஒரு நாள் வெளியில் வந்து தான் தீர வேண்டும் என்று பலரும் இந்த விசயத்தில் உண்மை நிலை அறிந்தும் கண்டும் காணாததுபோல் இருக்கின்றனர். ஆனால் நடிகையை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வந்த ரசிகர்கள் தான் இப்படி பரவும் சில தகவல்களால் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்

Trending News