கடந்த 2002 ஆம் ஆண்டு பிரசாந்த்-சிம்ரன் இருவரையும் வைத்து தமிழ் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அதிரடி மசாலா இயக்குனர் என கூறப்படும் இயக்குனர் ஹரி. இவர் கமர்சியல் படங்களை எடுப்பதில் கில்லாடி.
அதிலும் குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளியான சாமி, கோவில், அருள், வேல், பூஜை, சிங்கம் போன்ற அதிரடி படங்களை இயக்கியவர். இவருடைய அதிரடி படங்களை விறுவிறுப்பாக கொண்டு போவதிலும் காட்சிகளை தத்ரூபமாக அமைப்பதிலும் இவரை மிஞ்ச ஆள் இல்லை என்றே கூறலாம்.
ஒவ்வொரு காட்சிகளுக்கும் இடையில் இருக்கும் வேகம் தான் இவருடைய பலமே. இந்நிலையில் இன்று வரை அவர் இரண்டு பெரிய நட்சத்திரங்களை இயக்கியதில்லை. இவர் கண்டிப்பான பேர்வழி என்கிறார்கள் அனைவரும்.
தன்னுடைய படத்தில் நடிக்கும் அனைவரும் சரியான நேரத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு ரெடியாகி வர வேண்டும். இல்லை என்றால் யார் எவர் என்று பார்க்காமல் கோபத்தில் கத்தி விடுவாராம். இயக்குனர் ஹரி தனது படத்தில் பணியாற்றுபவர்களுக்கு என்றே தனி வழிமுறைகளும் கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கிறாராம்.
இதுவரை அஜீத் மற்றும் விஜய் வைத்து இவர் இயக்கியதில்லை. இதற்கு காரணம் அவருடைய கண்டிப்பு தான் என்று கூறப்படுகிறது. மேலும் அவர்களின் தேவை இவருக்கு இல்லை. இவரின் தேவையும் அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.
தல அஜித் மற்றும் தளபதி விஜய் இருவரையும் இயக்க வேண்டுமென துடிதுடித்துக் கொண்டிருக்கும் முன்னணி இயக்குனர்களின் மத்தியில் ஹரி இவர்கள் இருவரையும் மட்டும் இயக்குவதில் நாட்டம் காட்டாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு ஏற்ற கதையை அமைத்த பிறகு அவர்கள் நடிக்க விருப்பமா இல்லையா என்பதை கேட்கலாம் என்ற எண்ணமும் ஹரிக்கு உள்ளது.