சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் 5 மலையாள ஹீரோக்கள்.. விஜய்சேதுபதி இடத்தை பிடிக்கும் பகத் பாசில்

பொதுவாக பிரபலமாக இருக்கும் ஹீரோயின்கள் எல்லாம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் பிரபலமாக வலம் வருவார்கள். ஆனால் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் அப்படி கிடையாது. மற்ற மொழி திரைப்படங்களில் அவர்கள் அவ்வளவாக கவனம் செலுத்துவது கிடையாது.

ஆனால் தற்போது முன்னணி நடிகர்கள் பலரும் மற்ற மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலும் மலையாளத்தில் பிரபலமாக இருக்கும் ஹீரோக்கள் கோலிவுட்டில் நடிப்பதற்கு அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் 5 மலையாள ஹீரோக்களை பற்றி இங்கு காண்போம்.

பகத் பாசில் பிரபல இயக்குனர் பாசிலின் மகனான இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக இருக்கிறார். அந்த வகையில் இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் திரைப்படத்திலேயே வில்லத்தனத்தால் மிரட்டிய அவர் அதைத் தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்தார். தற்போது இவர் கமலுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவர் விஜய் சேதுபதியை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு வில்லத்தனத்தில் கலக்கியுள்ளார். அந்த வகையில் இவருடைய வில்லத்தனத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

துல்கர் சல்மான் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மலையாளத்தை போலவே கோலிவுட்டிலும் காதல் நாயகனாக வலம் வருகிறார். இவர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சாக்லேட் பாய் இமேஜ் உடன் இருக்கும் இவருக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதிலும் பெண் ரசிகைகள் இவருக்கு ஏராளமாக இருக்கின்றனர்.

நிவின் பாலி மலையாளத்தில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவரின் நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் பெருமளவில் கவர்ந்தது. இதனால் அவருக்கு தற்போது கோலிவுட்டிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

பிரித்விராஜ் தமிழில் கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து மொழி, சத்தம் போடாதே, அபியும் நானும் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் இவருக்கு இப்போதும் தமிழில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

மோகன்லால் பல வருடங்களாக மலையாள திரையுலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும் மோகன்லால் தமிழில் இருவர், பாப்கார்ன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்த ஜில்லா, காப்பான் போன்ற திரைப்படங்களும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. சில வருடங்களுக்கு முன்பு இவர் ஆடிய ஜிமிக்கி கம்மல் என்ற பாடல் மலையாளத்தை விட தமிழில் அதிகமாக ரசிக்கப்பட்டது. அந்த வகையில் இவருக்கு தமிழிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

Trending News