இசையமைப்பாளருடன் நெருங்கி பழகும் எக்ஸ் மனைவி.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாலா

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பாலா. இவர் தமிழில் தனது அண்ணன் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வீரம் மற்றும் அண்ணாத்த படங்களில் நடித்துள்ளார். மேலும தமிழைவிட மலையாள சினிமாவில் அதிக பட வாய்ப்பு வருவதால் அதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு மலையாள பாடகியான அம்ரிதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன்பின்பு எலிசபெத் உதயன் என்ற மருத்துவரை பாலா திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவருடைய முன்னாள் மனைவி அம்ரிதா சுரேஷ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது மலையாள சினிமாவில் பிரபல இசையமைப்பாளரான கோபி சுந்தரும், அமிர்தாவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கோபி சுந்தர் தமிழ் சினிமாவில் தோழா மற்றும் பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். கோபி சுந்தர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பின்னணி பாடகியாக இருந்த அபயா என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பாலாவிடம், அவருடைய முன்னாள் மனைவியின் தற்போதைய காதல் பற்றி ரசிகர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த பாலா, நான் தற்போது எலிசபத் உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் அமிர்தா மகிழ்ச்சியாக இருக்க பிரார்த்தனை செய்வதாகவும் பாலா தெரிவித்துள்ளார். மேலும் கோபி சுந்தர் மற்றும் அமிர்தா சுரேஷ் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.