பலாத்கார வழக்கு, மோசடி, கடத்தல பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு கொண்டிருக்கும் நித்யானந்தா, தனி ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசையில் கைலாச என்ற மர்ம தேசத்தை உருவாக்கி அங்கு வசிப்பதாகவும் அவ்வபோது சத்சங்கம் என்கின்ற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு சமூகவலைதளங்களில் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
ஆரம்பத்திலிருந்தே ஆன்மீகத்தில் நித்யானந்தா நாட்டம் கொண்டவராக இருந்தார். இவர் பொறியியல் கல்லூரி வரை சென்று படித்தார் என்றெல்லாம் கூறப்படுகிறது. ஆனால் இவரிடம் ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது என்று ஆசிரம மக்கள் கூறுகின்றனர். இவரிடம் பேசிக்கொண்டிருந்தால் மனதில் ஒரு வைப்ரேஷன் ஏற்படுமாம்.
அதில்தான் நிறைய பேர் அடிமையாகி இருக்கிறார்களாம். வெளிநாட்டு மக்கள் கூட வந்து ஆசிரமத்தில் தங்கியிருந்த அவரிடம் ஆசிபெற்று செல்வார்களாம் அந்த அளவிற்கு இவர் பேச்சில் ஒரு வசீகரம் இருக்குமாம். இவரை நான் கடவுளாக தான் பார்க்கிறேன் என்று சினிமா நடிகை ரஞ்சிதா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
கடவுளுக்கு நான் என்னையே அர்ப்பணித்து விட்டேன் என்றும் அதே பேட்டியில் கூறியதை யாரும் மறக்க முடியாது. நித்யானந்தா நாளிதழ் குமுதத்திற்கு கட்டுரை கூட எழுதி இருக்கிறாராம் “கதவைத் திற காற்று வரட்டும்” என்ற கட்டுரை தான் அது . உண்மையில் அந்தக் கட்டுரை நன்றாக இருக்குமாம்.
ஆசிரமத்தில் இவர் எப்பொழுதுமே ஜடாமுடி, காவி உடையில்தான் இருப்பாராம். லேசாக இவரின் குரல் பெண்குரல் போன்று இருக்குமாம். இதனால் சினிமா பிரபலங்களும் தங்களது மன அமைதிக்காகவும் நிம்மதியாகவும் இவரது ஆசிரமத்திற்கு படையெடுப்பு துவங்கினர். சீடர் என சொல்லிக்கொண்டு பெண்களிடம் கேவலமான வேலையை செய்துகொண்டிருக்கிறார். இவருடைய எளிதாக நடிகைகளும் விழுந்து விடுகின்றனர்.
வாய் இல்லனா நாய் தூக்கிட்டு போயிரும் என்ற பழமொழி நித்யானந்தாவிற்கு தான் பொருந்தும். இப்படி நித்யானந்தாவின் வசீகர பேச்சு திறமையால் ஆசிரமத்தில் பல பேரைத் தன் வசப்படுத்தி உள்ளார். ஆனால் இன்று வரை அந்த ஆசிரமத்தில் என்ன நடக்கிறது என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.