ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

மாநாடு படத்தை தவறவிட்ட 2 மாஸ் ஹீரோக்கள்.. அட இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்

கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் கிட்டத்தட்ட 217 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தப் படத்தினால் வெங்கட் பிரபு, சிம்பு மார்க்கெட் வேற லெவல் சென்றது. இருவரும் சம்பளத்தை பல கோடிகள் ஏற்றி விட்டனர். இவ்விருவரின் வாழ்வில் ஒரு முக்கியமான படம் என்றால் அது இதுதான்.

இந்நிலையில் இந்த மாநாடு படத்தின் கதையை முதலில் முக்கியமான ஹீரோ இரண்டு பேரிடம் வெங்கட்பிரபு சொல்லியிருக்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் அந்த கதையை நிராகரித்துவிட்டனர். அதன் பிறகுதான் சிம்புவுக்கு மாநாடு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

முதலில் சூர்யாவிடம் மாநாடு படத்தின் கதையை வெங்கட் பிரபு சொல்ல பிறகு, சூர்யா அந்தப் படத்தை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார். அதன் பிறகு வெங்கட் பிரபு சூர்யாவை வைத்து படம் எடுத்தே ஆக வேண்டும் என்ற முடிவில் வேறொரு கதையை தயாரித்து, சுமார் 95 கோடி பொருட்செலவில் 2015 ஆம் ஆண்டு சூர்யா-வெங்கட் பிரபு காம்போ-வில் வெளியான படம் தான் மாஸ்.

இந்தப் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் மாநாடு திரைப்படத்தை தவற விட்டதாக சூர்யா தற்போது வருந்துகிறார். சூர்யா மட்டுமல்லாமல் மாநாடு கதையை அவரது தம்பியாகிய கார்த்தியிடம் சொல்லி அவரும் நிராகரித்துவிட்டார். அதற்கு பதிலாக வெங்கட்பிரபு கார்த்தியை வைத்து பிரியாணி என்ற படத்தை இயக்கினார்.

2013 ஆம் ஆண்டு ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான பிரியாணி திரைப்படத்தில் ஹன்சிகா, பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தாலும் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு மட்டுமே பெற்று கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படங்களில் பிரியாணி பிளாக் படமாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கு அவர் மாநாடு படத்தின் கதையையே தேர்ந்தெடுத்து நடித்திருக்கலாம் அப்போது சரியான முடிவை எடுக்கவில்லை என கார்த்தி இப்பொழுது கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது. இப்படி சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இரண்டு பேரிடம் மாநாடு திரைப்படம் கைமாறி கடைசியில் சிம்பு நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது மாநாடு படம்.

- Advertisement -spot_img

Trending News