பேராசையில் சிவகார்த்திகேயன்.. ஆசையை தூண்டிய டாக்டர், டான்!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருந்து வருகிறார். இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவரை நம்பி எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் படம் என்றாலே 100 கோடி படம் ஆக மாறி வருகிறது. டாக்டர், டான் போன்ற படங்கள் எல்லாம் அசால்டாக 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படமும் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பைப் பெற்ற படமாகும் இந்த படம் 40 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்ட சுமார் 100 கோடி வசூலை உலக அளவில் ஈட்டியது

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் மே மாதம் திரைக்கு வந்த டான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 74.50 கோடி வசூலைக் குவித்திருக்கிறது. இந்தப் படம் கல்லூரி வாழ்க்கையை அழகாக சித்தரித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டான் திரைப்படம் இளைஞர்களுக்கு பிடித்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்தது.

சினிமாவில் நுழையும்போது படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மட்டும் இருந்த சிவகார்த்திகேயன் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக சாதனை புரிவதால் அடுத்தடுத்த படங்களில் தீவிரம் காட்டுகிறார். அதிலும் சிவகார்த்திகேயன் இப்பொழுது கதை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார்.

தன்னால் எதையும் சாதிக்க முடியும்  என்று அவருக்கே ஒரு பெரும் நம்பிக்கை வந்துவிட்டது. இவரை நாடி வரும் தயாரிப்பாளர்களிடம் ஒரே கேள்விதான் கேட்கிறார். என் சம்பளம் போக உங்களால் 50 கோடியில் இந்த படத்தை எடுத்து முடிக்க முடியுமா என்று`கேட்கிறாராம்.

எல்லா நடிகர்களும் இந்தக் கதை நமக்கு செட்டாகுமா, இதில் நாம் நடித்தால் ஓடுமா என்றுதான் பார்ப்பார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் இப்படி கேட்டு தயாரிப்பாளர்களை மிரள விடும் அளவுக்கு பேராசை பிடித்தவர் போல் நடந்து கொள்கிறாராம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →