திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மாமனாருக்கு போட்டியாக களமிறங்கிய விவாகரத்து நடிகை.. சூடுபிடிக்கும் பிக் பாஸ் சீசன் 6

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஐந்து சீசன்கள் ஆக உலகநாயகன் கமலஹாசன் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

மேலும் கடைசியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. அந்தச் சமயத்தில் கமல் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாமல் போனது. அப்போது நடிகர் சிம்பு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தற்போது அதேபோல் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கிலும் பிக்பாஸ் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 6வது சீசன் மிக விரைவில் தொடங்க உள்ளது. தற்போது நாகர்ஜுனா தனது பட வேலைகளில் பிஸியாக உள்ளதால் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது

இதனால் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏனென்றால் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் சமந்தாவுக்கு உள்ளது. ஆனால் தற்போது சமந்தா படு பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

நாகசைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்திற்கு பிறகு முழு வீச்சாக தன்னுடைய பட வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் சமந்தா. சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காற்றுவாக்கில் இரண்டு காதல் படத்தில் சமந்தாவின் கதீஜா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் புஷ்பா படத்தில் சமந்தா ஐட்டம் பாடலில் ஆடிய நடனம் உலகம் முழுவதும் பேமஸ் ஆனது. இந்நிலையில் தற்போது மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை சமந்தா தொகுத்து வழங்க சம்மதிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சென்டிமென்டாக தனது முன்னாள் மாமனார் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை சமந்தாவும் தொகுத்து வழங்க அதிக வாய்ப்புள்ளது.

Trending News