ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

இந்த போட்டோல ஆயிரம் அர்த்தம் இருக்கு.. உதயநிதியை திருமணத்திற்கு அழைத்த நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கிட்டத்தட்ட 6 .ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். அப்போது இவர்கள் இருவருக்குள் காதல் மலர்ந்துள்ளது.

இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல 2 காதல் படத்திலும் நயன்தாரா நடித்து இருந்தார். இந்நிலையில் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியானது.

ஆனால் திரைப்பிரபலங்கள் பலரும் இவர்களது திருமணத்திற்கு வருகை தர உள்ளதால் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களுடைய திருமண பத்திரிக்கையை முதல்வர் ஸ்டாலினுக்கு வைக்க சென்றுள்ளனர்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், ஸ்டாலின் அருகில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார். ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் உதயநிதியும், நயன்தாராவும் இணைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வெளியானது.

மேலும் இந்தச் செய்தி அப்போது சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் நயன்தாரா தற்போது உதயநிதி குடும்பத்திற்கு தன்னுடைய திருமண அழைப்பிதழை வைத்தது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் திரைத் துறையைச் சார்ந்த பல்வேறு பிரபலங்களுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது இவர்களது திருமண வைபவம் களைகட்டியுள்ளது.

Trending News