விஜய் சேதுபதிக்கு பொண்டாட்டியாக நடித்த 3 விஜய் டிவி நடிகைகள்.. வில்லனாய் இருந்தாலும் கொடுத்து வச்ச ஆளு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி விக்ரம் படத்திலும் வில்லனாக மிரட்டியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி கஞ்சா வியாபாரி ஆக நடித்துள்ளார்.

இவ்வாறு விஜய் சேதுபதி தனது அடுத்தடுத்த படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். இது தவிர பாலிவுட்டிலும் தற்போது 3, 4 படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு மூன்று பொண்டாட்டிகள் உள்ளனர்.

அதாவது விஜய் டிவியில் சீரியல் நடிகைகளான மகாலட்சுமி, மைனா நந்தினி மற்றும் பிக்பாஸ் சிவானி ஆகியோர் விஜய் சேதுபதிக்கு பொண்டாட்டியாக நடித்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானிக்கு ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்திற்கு முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படத்தில் பிரபல நடிகைகளான நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் ஜோடி போட்டு நடித்து இருந்தார். கண்மணி, கதீஜா என இருவரையும் ஒரே நேரத்தில் ராம்போவாக காதலித்து இருந்தார்.

இந்தப் படத்தில் இரண்டு நடிகைகள் என்றால் தற்போது விக்ரம் படத்தில் மூன்று நடிகைகளுடன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகப் படத்திலேயே கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மெர்ரி கிறிஸ்மஸ் படத்தில் நடிக்கிறார்.

இதனால் அங்குள்ள பாலிவுட் ஹீரோக்கள் தற்போது விஜய்சேதுபதி மீது உச்சக்கட்ட கடுப்பில் உள்ளார். இவ்வாறு ஒவ்வொரு படத்திற்கும் மனுஷன் வாழுராய்யா என ரசிகர்கள் கமெண்டுகளை தெறிக்கவிட்ட வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →