தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களை தன்னுடைய துறு துறு நடிப்பாலும், அழகாலும் கவர்ந்தவர் அந்த நாயகி. பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அவர் சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். அதனால் ஆடியோ லான்ச் போன்ற நிகழ்வுகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார்.
இந்நிலையில் பட வாய்ப்புகள் குறைந்த நடிகை தற்போது திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. சில காலங்களுக்கு முன்பு நடிகை, பிரபல நடிகர் ஒருவரை தீவிரமாக காதலித்தார். ஆனால் யார் கண்பட்டதோ ஆரம்பித்த வேகத்திலேயே அந்த காதல் பிரேக்கப் ஆனது.
அதன்பிறகு அந்த நடிகையும், நடிகரும் தங்கள் படங்களில் பிஸியாக நடித்து வந்தனர். ஏற்கனவே அவர்கள் இருவரும் நடித்து கிடப்பில் போடப்பட்ட அந்தப் படம் தற்போது மீண்டும் படமாக்கப்பட்டது. அப்போது நீண்ட காலங்களுக்குப் பிறகு சந்தித்த இருவரும் தங்கள் பிரச்சனைகளை பற்றி பேசி இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் முடிந்தால் காதலை மீண்டும் புதுப்பிக்கலாமா என்று கூட அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. நடிகரின் மீது கோபத்தில் இருந்த நடிகைக்கும் தற்போது மீண்டும் காதல் துளிர் விட்டுள்ளதாம். அதனால் கூடிய விரைவில் இருவரும் திருமண பந்தத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகையின் இந்த மனமாற்றத்திற்கு பின்னால் ஒரு வலுவான காரணமும் இருக்கிறது. என்னவென்றால் நடிகையின் காதலர் சமீபத்தில் நடித்த அந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதுவரை சாதாரண நடிகராக இருந்த அவர் அந்தப் பட வெற்றிக்கு பிறகு வசூல் நாயகனாக பார்க்கப்பட்டார்.
மேலும் திரையுலகில் அவருடைய மதிப்பும் உயர்ந்துள்ளது. இதனால் தான் நடிகை தற்போது நடிகரை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் எப்போது வேண்டுமானாலும் இவர்களுடைய திருமண அறிவிப்பு வெளிவரலாம் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.