திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

கிரிக்கெட் வீரருடன் ரகசிய உறவு.. குடும்ப குத்துவிளக்கு நடிகையால் பரபரப்பு

திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஹீரோயின்கள் கிரிக்கெட் வீரர்களை காதல், டேட்டிங் செய்வது எல்லாம் சகஜமான விஷயம்தான். இப்படி கோலிவுட் முதல் பாலிவுட் வரை எத்தனையோ நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்த லிஸ்டில் தற்போது ஒரு இளம் நாயகியும் இணைந்திருக்கிறார்.

மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்த காதல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அந்த நாயகி. முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களைப் பெற்ற அவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு ஒல்லி நடிகருடன் இணைந்து இவர் நடித்த தமிழ் திரைப்படம் வெற்றி பெறாத நிலையில் தமிழ் சினிமாவே வேண்டாம் என்று அவர் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு கிளாமர், லிப் லாக் போன்ற காட்சிகளில் நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்த நடிகை சமீபத்தில் மீண்டும் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.

ஆனால் அந்தப் படமும் தோல்வி அடைந்த நிலையில் இனி தமிழில் நடிக்க கூடாது என்று அந்த நடிகை முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில் நடிகை கிரிக்கெட் வீரர் ஒருவருடன் நெருங்கிப் பழகி வரும் விஷயம் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பொது இடங்களில் அவர்கள் இருவரும் ஜோடியாக செல்வதைப் பார்த்த பலரும் நடிகையிடம் காதலில் விழுந்து விட்டீர்களா என்று கேட்டு வருகின்றனர். ஆனால் அதற்கு அந்த நடிகை நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதல் எல்லாம் இல்லை என்று நாசூக்காக மறுத்து வருகிறாராம். எப்படி இருந்தாலும் உண்மை ஒரு நாள் வெளியில் வந்துதானே ஆக வேண்டும் என்று நடிகையின் காதல் விவகாரத்தை பற்றி தற்போது திரையுலகில் பேசி வருகின்றனர்.

Trending News