விஜய்சேதுபதிக்கு ஸ்கெட்ச் போட்ட அஜித் பட இயக்குனர்.. வேற லெவலில் உருவாகும் கூட்டணி

தற்போது விஜய் சேதுபதி மாஸ் வில்லனாக படங்களில் மிரட்டி வருகிறார். ஹீரோவாக இருந்ததைவிட இப்போதுதான் அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் அவரை ஹீரோவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அஜீத் படத்தின் இயக்குனர்.

சதுரங்கவேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச் வினோத். இப்படத்தில் இவருடைய வித்தியாசமான முயற்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்த அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு வினோத்துக்கு கிடைத்தது. நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தைத் தொடர்ந்து தற்போது அஜித்தின் 61 வது படத்தை வினோத் இயக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கயுள்ளார். இப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி முன்பே வெளியாகியிருந்தது.

ஏகே 61 படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்கிறார். இந்நிலையில் தொடர்ந்து மூன்று முறை அஜித் உடன் பணியாற்றிய வினோத் அடுத்தது யாருடைய படத்தில் பணியாற்றயுள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியுடன் வினோத் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் வில்லனாக அனைவரையும் மிரள வைத்திருந்தார்.

இதைதொடர்ந்து பாலிவுட்டிலும் சில படங்களில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது. தற்போது அஜீத்தின் 61வது படத்தை முடித்துவிட்ட விஜய்சேதுபதி படத்தை வினோத் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் இப்படத்தை வினோத் தான் தயாரிக்கயுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்தப்படம் உறுதியான பிறகு விரைவில் இதற்கான அதிகாரபூர்வ தகவல் வெளியாகும். மேலும் வினோத் படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளாராம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →