சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வழக்கம்போல் தன் புத்திசாலிதனத்தை காட்டிய ப்ளூ சட்டை மாறன்.. விக்ரம் படத்திற்கு வந்த சோதனை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நான்கு வருடங்களுக்குப் பின் திரையில் தோன்றிய விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் மூன்றாம் தேதி திரையிடப்பட்டு தற்போது திரையரங்கில் வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. இதில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, காயத்ரி, சிவானி, மைனா நந்தினி, மகேஸ்வரி, நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

இந்த படம் ரிலீஸ் ஆன ஒரு மாதத்திற்குள்ளேயே உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூலை தாண்டி இருக்கிறது. தமிழ்சினிமாவில் எந்த தமிழ் படம் வெளிவந்தாலும் அந்தப் படத்தை குறித்து ஏதாவது நெகட்டிவ் கமெண்டுகளை தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டு ட்ரெண்டிங்கில் உள்ளவர் ப்ளூ சட்டை மாறன்.

எப்போதுமே தன்னை புத்திசாலியாக நினைத்து ப்ளூ சட்டை மாறன் செய்யும் திரை விமர்சனத்தில் தற்போது விக்ரம் திரைப்படம் அவரது கையில் சிக்கி விக்ரம் படத்திற்கு வந்த சோதனையாக பார்க்கப்படுகிறது. இவர் விக்ரம் படத்தில் குறித்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்டுகளை கலவையாக கொடுத்து நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் விக்ரம் படத்தை குறித்து பதிவிடும் கமெண்ட்களும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஏற்கனவே விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கைதி படத்தை பார்த்துவிட்டு வாருங்கள் என ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் ட்விட் செய்திருந்தார். மேலும் விக்ரம் படத்தை பார்த்த பிறகு கைதி படத்தில் இருந்த ஒரு சில கதாபாத்திரம் அப்படியே விக்ரம் படத்திலும் இருந்ததால் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் இரண்டாம் பாகம் தான் விக்ரம் தெளிவாகத் தெரிந்தது.

இதன்பிறகு லோகேஷ் எடுக்கும் விக்ரம் 2 நிச்சயம் கைதி படத்தின் மூன்றாம் பாகம் தான். எனவே இந்த விஷயத்தை வைத்து வெற்றிமாறன் விக்ரம் படத்தை பங்கம் செய்துகொண்டிருக்கிறார். ‘கைதி-ல வந்தவங்க விக்ரம் இல்ல வராங்கல’ என ஒருவர் கிண்டல் அடித்து இருக்கிறார். இதற்கு ப்ளூ சட்டை மாறன், ‘பாக்கியலட்சுமி வீட்டிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வந்தாங்க பாரு அது போல தான், விக்ரம் படத்தில் கைதி வந்திருக்காங்க’ என நக்கல் அடித்துள்ளார்.

அதேசமயம் இவர் விக்ரம் படத்தை குறித்த பாசிட்டிவ் கமெண்டுகளை தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டு உலகநாயகன் ரசிகர்களின் ஆதரவையும் வெட்கமே இல்லாமல் பெற்றுக்கொள்கிறார். விக்ரம் படத்தை பற்றி ஒருதலைக் கருத்தோடு இருக்காமல் ‘மதில் மேல் பூனை போல்’ அவ்வபோது மாற்றி மாற்றி பேசி குழப்பம் அடையச் செய்வதால் இவரது விமர்சனம் தரமானது அல்ல என கருதப்படுகிறது.

Trending News