தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து தற்போது ஹாலிவுட் வரை பிரபலமாக இருப்பவர் அந்த நடிகர். இளம் வயதிலேயே பிரபல நடிகரின் வரிசை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். உலக அளவில் பிரபலமாக இருக்கும் அந்த நடிகருக்கு மாப்பிள்ளையான இவரைப் பார்த்து திரையுலகமே ஆச்சரியப்பட்டு போனது.
ஆனால் நன்றாக சென்று கொண்டு இருந்த இவர்களுடைய திருமண வாழ்க்கை யார் கண்பட்டதோ தற்போது விவாகரத்து வரை வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் தன் மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக வெளிப்படையாக அறிவித்தார்.
இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இப்படி ஒரு முடிவை வெளியிட்ட அந்த தம்பதிகளை பார்த்து திரை உலகமே அதிர்ச்சியடைந்தது. மேலும் அவர்கள் இருவரின் பிரிவுக்கு இதுதான் காரணம் என்று பல செய்திகள் ஊடகங்களை கலக்கி வந்தது.
ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருந்தனர். இதனிடையே நடிகரின் மனைவி ஆல்பம் சாங், பாலிவுட் திரைப்படம் இயக்குவது என்று தன்னுடைய வேலையில் கவனத்தைச் செலுத்திவந்தார்.
இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க பலரும் முயன்ற நிலையில் அதனை தொடர்ந்து மறுத்து வந்த நடிகர் தற்போது இறங்கி வந்துள்ளார். அவரின் இந்த மனமாற்றத்திற்கு சமீபகாலமாக அவர் நடித்த திரைப்படங்கள் சந்தித்த தொடர் தோல்விகள் தான் காரணமாக சொல்லப்படுகிறது.
விவாகரத்து அறிவிப்பு வந்த பிறகுதான் தனக்கு இப்படி தோல்விகள் வருவதை புரிந்து கொண்ட நடிகர் தற்போது மனைவியை சமாதானப்படுத்த ரகசிய தூது விட்டுள்ளார். ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் கூட விசாரிக்காத கணவரின் மேல் முன்னாள் மனைவிக்கு பயங்கர கோபம் இருக்கிறது.
இதனால் அவர் இனி ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு இடமில்லை என்று நடிகரை அவமானப்படுத்தி விட்டாராம். இதனால் அதிர்ந்து போன நடிகர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்.