வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பெரிய ஹீரோக்கள் கெஸ்ட் ரோலில் வந்து கலக்கிய 5 படங்கள்.. வெறித்தனமாய் வந்து சூர்யா

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக உள்ள நடிகர்கள் தங்களுக்கு இணையான சக நடிகர்களின் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளனர். சினிமாவில் நடிகர்களுக்குள் இவ்வாறு ஒரு நல்ல நட்பு இருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு பெரிய ஹீரோக்கள் கெஸ்ட் ரோலில் வந்து கலக்கிய படங்களைப் பார்க்கலாம்.

கமலஹாசன் : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தில்லு முல்லு படத்தில் கமலஹாசன் ஒரு வழக்கறிஞராக சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகினி ஆகியோர் நடிப்பில் வெளியான மகளிர் மட்டும் படத்தில் அலுவலக மேமேலாளராக சில காட்சிகளில் மட்டும் கமல்ஹாசன் நடித்து இருந்தார்.

அஜித் : ஸ்ரீதேவி நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அஜித் சில நிமிடங்கள் வந்த கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஸ்ரீதேவி முதல் முறையாக விமானத்தில் பயணிக்கும்போது, அவருடைய சக விமானியாக அஜித் நடித்திருந்தார்.

சிலம்பரசன் : ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான காக்காமுட்டை படத்தில் சிம்பு கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார். பிரம்மாண்ட பீட்சா கடையின் திறப்பு விழாவிற்கு சிம்பு வருவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

தனுஷ் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான வை ராஜா வை படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதாவது தனுஷின் புதுப்பேட்டை படத்தில் கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதை கதாபாத்திரத்துடன் வை ராஜா வை படத்தில் தோன்றியிருந்தார்.

சூர்யா : அவன் இவன், கடைக்குட்டி சிங்கம் போன்ற பல படங்களில் சூர்யா கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வந்து மிரட்டியிருந்தார் சூர்யா.

Trending News