சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

200 கோடி பட்ஜெட்டில் அஜித்-விஜய் இணையும் படம்.. கால்ஷீட்காக காத்திருக்கும் தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவில் உச்ச நாயகர்களாக இருக்கும் தல தளபதி இருவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருப்பதால், இவர்கள் இருவரும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என உலகமே காத்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலேயே படத்தில் நடித்த இருவரும் மீண்டும் அதன் பிறகு எப்போது இணைவார்கள் என அவர்களுடைய ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது இவர்கள் இருவரையும் வைத்து 200 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க தயாரிப்பாளர் ஒருவர் துடி துடித்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரின் கால்ஷீட் மட்டும் கிடைத்தால் உடனே படத்தை தொடங்கி விடுவேன் என தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஆர்கே சுரேஷ், இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வில்லனாகவும் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பாலாவின் தாரை தப்பட்டை திரைப்படத்தில் முதன்முதலாக வில்லனாக அறிமுகமானவர். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு வெளியான சாட்டை படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறி ,அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு சலீம் படத்தையும் தொடர்ந்து தயாரித்தார்.

இப்படி தொடர்ந்து படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கும் ஆர்கே சுரேஷ், தல-தளபதி இருவரின் படங்களை தயாரிக்க முனைப்புடன் செயல்படுகிறார். இவருடைய முயற்சி வெற்றி பெற்றால் அது அஜித்-விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும்.

ஏற்கனவே தல அஜித், விஜய்யுடன் நடிக்க தயார் என ஒரு பேட்டியில் குறிப்பிட்ட நிலையில், இருவரும் இணைந்து நடிப்பதை அவர்களது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் சந்தோசமாக உள்ளது. ஏனென்றால் இவர்களது படம் ஒரே தினத்தில் வெளியிட்டால் திரையரங்கில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள் ஒரு படத்தில் இரண்டு பேரும் நடித்தால் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதுதான்.

அப்படி ஒன்று மட்டும் நடந்தால் அந்தப் படம்தான் தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான எல்லா படங்களின் வசூல் சாதனையை முறியடித்து பல ஜென்மம் பேசக்கூடிய படமாக மாறிவிடும். நிச்சயம் தமிழ் சினிமாவிற்கு அப்படி ஒரு படம் தேவை. அப்போதுதான் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வது முடிவுக்கு வரும். எனவே ஆர்கே சுரேஷின் இந்த முயற்சி செல்லுபடியாகுமா என விரைவில் தெரிந்து விடும்.

- Advertisement -spot_img

Trending News