ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜய்யிடம் வித்தியாசமாக நடந்து கொள்ளும் ராஷ்மிகா மந்தனா.. தளபதி 66 என்ன ஆகப்போகுதோ

தளபதி விஜயின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதியின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப கதைக்களத்தை கொண்ட சென்டிமெண்ட் படமாகவே இருக்கும் என ஏற்கனவே தளபதி 66 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்திருக்கிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளது. இந்தப் படத்திற்கான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி விஜய்யின் பிறந்த நாளான வரும் 22-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தளபதி 66 படத்திற்கான பூஜை துவங்கப்பட்ட போதே தளபதி விஜய் உடன் சேர்ந்து நடிப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டியிருப்பது அப்பட்டமாக தெரிந்தது. ஏனென்றால் ராஷ்மிகா மந்தனா, தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகையாம். அவருடன் இணைந்து நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தன்னுடைய தோழியின் திருமணத்தின்போது அனைவரிடம் சொல்லி சந்தோசப் பட்டதாக கூறியிருக்கிறார்.

இவருடைய மகிழ்ச்சி எந்த அளவிற்கு இருந்தது என சென்னையில் நடைபெற்ற தளபதி 66 படத்திற்கான பூஜை போட்ட அன்றே வெளியான புகைப்படத்தை பார்த்தால் நாமே தெரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் அதில் தளபதி விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா, யாருடைய கண் திருஷ்டியும் விஜய் மீது பட்டுவிடக் கூடாது என விஜய்யின் மீது கூடுதல் அக்கறையுடன் திருஷ்டி சுத்தி போட்டதும், சாதாரண ரசிகை மனோபாவத்தில் அவருடன் சேர்ந்து ஆர்வத்துடன் புகைப்படமும் ரசிகர்களின் கவனம் பெற்றது.

இப்படியெல்லாம் வினோதமாக நடந்து கொள்ளும் ராஷ்மிகா மந்தனா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் போது எப்படி நடந்து கொள்வாரோ என்றும், தளபதி 66 எப்படி வரப்போகிறதோ என்றும் கலக்கத்தில் உள்ளனர். இருப்பினும் ராஷ்மிகா மந்தனா தளபதி 66 படத்தில் தனக்கு வலிமையான கதாபாத்திரம் அமைந்திருப்பதாக கூறியிருக்கிறார்.

மேலும் விஜய், ராஷ்மிகா மந்தனா உடன் சரத்குமார். பிரபு. ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர். கூடிய விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பை முடித்து தளபதி 66 படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளரான தில் ராஜூ திட்டமிட்டு திட்டமிட்டுள்ளார்.

Trending News