80-களில் தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைசாலியாக டி ராஜேந்தர், தற்போது உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதால் வயிற்றுப்பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதற்காக மேல் சிகிச்சைக்கு சிங்கப்பூருக்கு செல்வதாக இருந்த நிலையில், தற்போது இன்று அமெரிக்காவிற்கு செல்ல இருக்கும் டி ராஜேந்தரை, உலகநாயகன் கமலஹாசன் நேரில் சந்தித்து அவருடைய உடல் நலத்தை குறித்து விசாரித்து இருக்கிறார். அப்போது டி ராஜேந்தர், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் டி ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் ஆகியோர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.
இதில் டி ராஜேந்தர் ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிட திடகாத்திரமாக இருப்பதால், அவர் அமெரிக்கா சென்று வெகு சீக்கிரமே இந்தியா திரும்புவார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் ஜூன் மூன்றாம் தேதி ரிலீசான விக்ரம் படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் படுஜோராக கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிஸியாக இருக்கும் கமல், டி ராஜேந்தரை நேரில் வந்து உடல் நலத்தை விசாரித்து சிம்பு மற்றும் அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் அளித்திருக்கிறார்.
டி ராஜேந்தரின் மூத்த மகனான சிம்பு அண்மையில் அமெரிக்கா சென்று அங்கு தந்தையுடைய சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருக்கும் பிரபல மருத்துவமனை ஒன்றில் சிறந்த முறையில் சிகிச்சை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டு வந்திருக்கிறார்.
அமெரிக்காவிற்கு டி ராஜேந்தர் மேல் சிகிச்சைக்கு செல்லும் போது, சிம்புவும் உடன் செல்கிறார். இதனால் சிம்பு நடித்துவரும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைத்துவிட்டு, தந்தையுடன் சிம்பு அமெரிக்காவிலிருந்து மறுபடியும் சென்னை திரும்பிய பிறகு அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
அதேபோன்றுதான் சிம்பு நடிப்பில் வரும் ஜூன் 22-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக இருக்கும் ‘வெந்து தணிந்த காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சிம்பு சென்னை திரும்பிய பிறகுதான் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. டி ராஜேந்திரன் விரைவில் குணமாகி வரவேண்டும் என அவருடைய ரசிகர்களும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர்.