2017 ஆம் ஆண்டு மாநகரம் வெளியான திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து கார்த்தி நடிப்பில் வெளியான கைதி, தளபதி விஜய்யின் மாஸ்டர், தற்போது திரையரங்கில் ரிலீஸாகி பின்னி பெடல் எடுத்து கொண்டு இருக்கும் உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் போன்ற பெரிய பெரிய நடிகர்களை வைத்து இயக்கி தொடர்ந்து வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கும் வெற்றி இயக்குனராக பார்க்கப்படுகிறார்.
இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜின் இந்த அசுர வளர்ச்சி மூலம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட் வரை பேமஸ் ஆகி விட்டார். இந்நிலையில் லோகேஷ் விக்ரம் படத்தை இயக்கி கொண்டிருக்கும்போதே, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனர் லலித் குமார் தயாரிக்கும் தளபதி 67 படத்தில் கமிட்டாகி விட்டார்.
விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் சம்பளம் 10 கோடி. அதன்பின் விக்ரம் 2 படத்திற்கு அவர் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார். அதாவது 10 கோடியிலிருந்து 12 கோடிகள் ஆக்கிவிட்டார். லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி முதல் தற்போது வரை உலக அளவில் 300 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதால் அவருடைய ரேஞ்ச் வேற லெவலுக்கு சென்று கொண்டிருக்கிறது.
இதை ஏற்கனவே கணித்து வைத்திருந்த தளபதி 67 படத்தின் தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனர் லலித் குமார் விக்ரம் படத்திற்கு முன்பே லோகேஷ் கனகராஜ் ரூபாய் 10 கோடி சம்பளத்திற்கு தளபதி 67 படத்தை இயக்கி கொடுக்க ஒப்பந்தம் செய்துவிட்டார். இதனால் லோகேஷ் கனகராஜ் வேறு வழி இல்லாமல் அதே சம்பளத்தில் இந்த படத்தை இயக்கி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஏனென்றால் விக்ரம் படத்தின் வெற்றியை பார்த்த பிறகாவது தளபதி 67ல் அவருக்கு சம்பளத்தை சம்பளத்தை ஏற்றி தராததால் பெரும் சங்கடம் அடைந்திருக்கிறார். அதனால் லலித்-க்கு லாபம் லோகேஷ்க்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்தப் படத்தை தவிர மற்ற படங்களில் லோகேஷ் அடுத்தடுத்த கமிட்டாகி கொண்டிருப்பதால் அதில் பார்த்துக் கொள்ளலாம் என மனதை தேற்றிக்கொண்டார்.
விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் மீது அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் ரசிகர்களுக்கு தளபதி 67 படத்தை பக்கா மாஸ் ஆன படமாக்க இயக்குவேன் ஏற்கனவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதியின் 66-வது படத்தை வம்சி இயக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அது சென்டிமென்ட் படமாக இருக்கும் என அறிவித்ததால், தளபதி ரசிகர்களுக்கு தளபதியின் 67-வது படத்தை குறித்து அதிக ஈடுபாட்டுடன் காத்திருக்கின்றனர். அவர்களுடைய நம்பிக்கையை லோகேஷ் நிச்சயம் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.