தமிழ் திரையுலகில் பல வருடங்களாக வெற்றிக்காகப் போராடி வரும் சில நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடும் உழைப்பைக் கொடுத்து இவர் எத்தனையோ திரைப்படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் அனைத்தும் அவ்வளவாக ரசிகர்களை கவரவில்லை.
இருப்பினும் அவர் புதுப்புது கதாபாத்திரங்களை தேர்வு செய்து தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது நடித்துள்ள யானை திரைப்படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். இந்தத் திரைப்படம் வெளி வந்தால் அதன் பிறகு அவருடைய ரேஞ்சே வேற லெவலுக்கு மாறி விடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.
ஆனால் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் சில பல காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இந்த பட ரிலீசை முன்னிட்டு அருண்விஜய் ஏகப்பட்ட பிளான்களை போட்டு வைத்திருக்கிறார். ஆனால் அவை அனைத்தும் தற்போது வீணாகப் போய் விட்டதாம்.
மேலும் அவர் நடித்து முடித்துள்ள பார்டர் உள்ளிட்ட சில திரைப்படங்களும் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் யானை படமும் பிரச்சனையில் இருப்பதால் அவர் மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறார். இதனால் அருண் விஜய் தற்போது வில்லனாக களம் இறங்கியுள்ளார்.
இவர் ஏற்கனவே அஜீத் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். அவருடைய அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த அருண் விஜய் தற்போது தெலுங்கு திரைப்படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் திரைப்படத்தில்தான் அருண் விஜய் வில்லன் வேடம் ஏற்றுள்ளார். மீண்டும் வில்லனாக நடிக்கும் அருண் விஜய்யிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் இரண்டு பேருக்கும் முக்கியத்துவம் இருக்கும் கேரக்டர் என்பதால் தான் நான் இதில் நடிக்க சம்மதித்தேன் என்று கூறியிருக்கிறார்.
இதன் மூலம் அருண் விஜய் மீண்டும் பழைய விக்டராக மாறி இருக்கிறார். அந்த வகையில் அவருடைய இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.