திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த மாதரி நடிக்க மாட்டேன்.. அதிரடி காட்டிய ஜிவி பிரகாஷ்

கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த ஒரு விளம்பரத்தில் மட்டும் கண்டிப்பாக நான் நடிக்கவே மாட்டேன் என நடிகரும், இசை அமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஜிவி பிரகாஷின் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் வாழ்த்துக்கள் தெரிவித்த ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு நன்றியைத் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே தற்போது ஆன்லைன் ரம்மி கேம் சூதாட்டம் வைரலாகி வரும் நிலையில், இந்த கேமினை விளம்பரம் படுத்த , பிரபல நடிகர்களான பிரேம்ஜி, ரெஜினா கேசன்ட்ரா ,பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து மக்களிடம் ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளம்பரப்படுத்துகின்றனர்.

ஆன்லைன் ரம்மியால் பலரும் பணம் இழந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு சிலர் மனமுடைந்து தற்கொலை முயற்சி செய்து கொள்கின்றனர். இதனிடையில் தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய ஜிவி பிரகாஷ், எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஆன்லைன் ரம்மி கேம் போன்ற சூதாட்ட விளையாட்டிற்கு நான் விளம்பரம் செய்ய மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதன்மூலமாக தனக்கு படவாய்ப்புகள் வரவே இல்லையென்றாலும் பரவாயில்லை, நான் இப்படிப்பட்ட விளம்பரங்களில் நடிக்கவே மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற சூதாட்ட கேமின் விளம்பரங்களில் மற்ற நடிகர் நடிகைகள் நடிப்பதை நிப்பாட்டிக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் படங்களில் இசை அமைப்பது மட்டுமில்லாமல் நடிப்பதையும் ஒருபுறம் செய்து வரும் நிலையில் அவருக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். அதேபோல பல சமுதாய கருத்துக்களையும் அவ்வப்போது பதிவிடும் நிலையில், தற்போது தனது பிறந்தநாளன்று சூதாட்ட விளையாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஜிவி பிரகாஷை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

தற்போது ஜிவி பிரகாஷின் நடிப்பில் 13, 4ஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ள சூரரைப்போற்று திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News