விஜய், அஜித் செய்யாததை செய்து காட்டும் ரஜினி.. மலைத்துப்போய் பார்க்கும் திரையுலகம்

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் மிகப் பெரிய பேரும், புகழும் பெற்று பிரபலமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய அளவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர் அதனால்தான் அவர் இன்றுவரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

சினிமாவை பொறுத்தவரை இவர் சிறுசிறு தோல்விகளைச் சந்தித்தாலும் இவருடைய பல திரைப்படங்கள் வசூலில் மாஸ் காட்டும். அந்த வகையில் தற்போது இவர் நடிக்க இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

முதல் முறையாக இயக்குனர் நெல்சனுடன் சூப்பர் ஸ்டார் இணைவதும் இந்த ஆர்வத்துக்கு காரணமாக இருக்கிறது. பொதுவாகவே சூப்பர் ஸ்டார் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் ஆர்வம் காட்டுபவர். அதுமட்டுமல்லாமல் புதுமுக இயக்குனர்களின் திறமைகளையும் இவர் மனம் திறந்து பாராட்டுவார்.

அந்த வகையில் இவருக்கு ஒரு திரைப்படம் பிடித்துவிட்டால் போதும் உடனே சம்பந்தப்பட்ட பட குழுவினரை நேரிலோ அல்லது போனிலோ அழைத்து பாராட்டி பேசி விடுவார். அதே போன்று தான் அவர் தற்போது திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படத்தை பார்த்து பிரமித்துப் போய் உள்ளார்.

லோகேஷ் கனகராஜின் அற்புதமான இயக்கத்தைப் பார்த்து மெய்சிலிர்த்து போன சூப்பர் ஸ்டார் அவரை மனம் திறந்து பாராட்டியுள்ளார். மேலும் அவரின் நண்பர் கமல்ஹாசனுக்கும் போன் செய்து நீண்ட நேரம் பாராட்டிப் பேசியிருக்கிறார். இதைப் பற்றிதான் தற்போது பலரும் ஆச்சரியமாக பேசி வருகின்றனர்.

எந்த போட்டியும், பொறாமையும் இல்லாமல் பிறரை மனம் திறந்து பாராட்டும் சூப்பர் ஸ்டாரின் இந்த குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் போன்ற நட்சத்திரங்கள் கூட இப்படி யாரையும் புகழ்ந்து பேசியது கிடையாது. அந்த வகையில் ரஜினிகாந்த் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக இருப்பதால் தான் சூப்பர் ஸ்டாராக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறார்.