அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் படத்தில் நடிக்கயுள்ளார். இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றது.
மேலும் கடைசியாக நெல்சன் இயக்கிய விஜய்யின் பீஸ்ட் படமும் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இதனால் ரஜினிக்கு நெல்சன் மீது ஒரு சில அதிருப்தி இருந்தது. இதற்காக நெல்சனுக்கு திரைக்கதையில் உதவுமாறு கே எஸ் ரவிக்குமாரை ரஜினி நியமித்திருந்தார். இந்நிலையில் நேற்று தலைவர் 169 டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் ஏமாற்றத்தை தந்தது. அதாவது படத்தின் பெயர் ஜெயிலர் என வைக்கப்பட்டிருந்தது. மேலும் மதுரைவீரன் சுவாமி கையில் உள்ள அருவாள் போல அதில் ரத்தக்கறையுடன் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.
இதனால் ஜெய்லர் படம் அனேகமாக பயங்கரமான ஆக்ஷன் படமாக இருக்கும் என ரசிகர்கள் கணித்துள்ளனர். மேலும் ரஜினி இப்படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் ஒருபுறம் ஆரவாரமாக உள்ளனர்.
ஆனாலும் சூப்பர் ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் சிம்பிளாக உள்ளது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை வெளியான ரஜினி படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினியின் புகைப்படம் இல்லாமல் வெளியானதில்லை.
ஆனால் தலைவர் 169 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி படம் இல்லாமல் இவ்வளவு சிம்பிளாக உள்ளது. இதனால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே நெல்சன் சொதப்பி விட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், படத்தை எப்படி எடுக்க போகிறாரோ என்ற பயத்திலும் உள்ளனர்.