வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நயன்-விக்கியை தொடர்ந்து திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி.. ரகசியமாக நடந்த திருமணம்!

கடந்த ஆறு வருடங்களாக காதலித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக தங்களது திருமணத்தை நடத்தி முடித்தனர். இதைத் தொடர்ந்து மற்றொரு நட்சத்திர இளம் காதல் ஜோடிக்கு திருமணம் நடந்திருக்கிறது.

2005 ஆம் ஆண்டு மிஸ் ஆந்திர பிரதேசம் பட்டத்தை வென்று, அதன் பிறகு தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர், பின்பு நடிகையாக ‘கிடகிதலு’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக  திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை மது ஷாலினி. இவர் அதன்பிறகு தமிழ் சினிமாவிற்கு பழனியப்பா கல்லூரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஓரளவு பரிச்சயமானார்.

பின்பு பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பின்பு கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படத்திலும், அதன்பிறகு மது ஷாலினி ‘விசித்திரம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் சிபிராஜ் நடித்த ‘ரேஞ்சர்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மது ஷாலினிக்கும் நடிகை கோகுல் ஆனந்த் என்பவருக்கும் ஹைதராபாத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்திற்கு அவர்களது குடும்பம் மட்டுமே பங்கேற்று திரைப்பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. நடிகர் கோகுல் ஆனந்த் சென்னை டு சிங்கப்பூர், திட்டம் 2, நடுவண் போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர்.

கோகுல் ஆனந்த் மற்றும் மது ஷாலினி இருவருக்கும் ‘பஞ்சராக்ஷரம்’ என்ற படத்தில் நடித்தபோது காதல் ஏற்பட்டு, நீண்ட நாளாக காதலித்த இவர்கள் அதன் பிறகு தற்போது ஹைதராபாத்தில் மிக எளிமையாக நடந்த திருமணத்தில் இரு வீட்டாரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அவர்களது திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதை அடுத்து கோகுல் ஆனந்துடன் தனக்குத் திருமணமான புகைப்படத்தை மது ஷாலினி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்திருக்கிறார். இவருடைய இந்தப் பதிவை பார்த்த ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

actress-madhushalini-cinemapettai
actress-madhushalini-cinemapettai

Trending News