அண்ணனைப் பார்த்து சந்தேகப்பட்ட கார்த்தி.. சூர்யாவுக்கு இந்த நிலைமையா!

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் தன்னுடைய 41வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே வந்து அசத்தியிருந்தார்.

சூர்யா சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகியும் முதல் முறையாக விக்ரம் படத்தில் துணிச்சலாக வில்லனாக நடித்ததற்கு பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் உலக நாயகன் கமலஹாசன் சென்டிமென்டாக வைத்திருந்த ரோலக்ஸ் வாட்சை சூர்யாவுக்கு பரிசாக வழங்கினார்.

இந்நிலையில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்காக நீண்ட முடியை வளர்த்திருந்தார். சூர்யா படங்களில் பிஸியாக இருந்த சமயத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டது. அப்போது சூர்யா நீண்டதாக முடியை வளர்த்துள்ளார்.

இதைப்பார்த்த சூர்யாவின் தம்பி கார்த்தி சந்தேகப்பட்ட எதற்காக இவ்வளவு முடி வளர்கிறாய் என கேட்டுள்ளார். நான்தான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறேன். அதனால் முடி வளர்த்து வருகிறேன். நீ எதற்கு அதிகமாக முடி வளர என சந்தேகப்பட்டு கேட்டுள்ளார்.

அதற்கு சூர்யா இப்படி முடி வளர்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதனால் சும்மா முடி வளர்த்து பார்க்கிறேன் என கூறியுள்ளார். சூர்யாவின் இந்த கெட்டப்பை பார்த்து தான் இயக்குனர் அஜய் ஞானவேல் ஜெய்பீம் படத்தில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்திற்கு சூர்யா சரியாக இருப்பார் என கூறியுள்ளார்.

அதனால் தான் ஜெய்பீம் படத்தில் தனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததாக பேட்டி ஒன்றில் சூர்யா தெரிவித்துள்ளார். மேலும் அதே போன்ற தோற்றத்துடன் கொஞ்சம் வில்லத்தனமாக விக்ரம் படத்திலும் சூர்யா மிரட்டியிருந்தார். இந்நிலையில் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →