புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தளபதியால் டென்ஷனில் சசிகுமார்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யம்

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அறிமுகமாகி இன்று நடிகராக ரசிகர்களை கவர்ந்து இருப்பவர் சசிகுமார். இவரின் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

அதில் இவர் முதலில் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படம் ஏகப்பட்ட விருதுகளை வாங்கி குவித்தது. ஜெய், சுவாதி, சமுத்திரகனி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்த அந்த திரைப்படம் என்பது காலகட்டத்தில் நடக்கும் கதையாக வெளிவந்திருந்தது.

அந்த படத்தில் நடிக்கும்போது நடிகர் ஜெய், இயக்குனர் சசிகுமாரிடம் நிறைய முறை திட்டு வாங்கியதாக தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஜெய் தமிழில் விஜய்க்கு தம்பியாக பகவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதில் அவர் அச்சு அசல் விஜய்யைப் போலவே இருப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

மேலும் அந்த படத்தில் அவருடைய நடிப்பும் விஜய் போலவே இருந்தது. அந்த படத்திற்கு பிறகு சென்னை 28 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த அவருக்கு சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் அவர் விஜய்யை போலவே நடித்தது இயக்குனரை ரொம்ப டென்ஷன் படுத்தியிருக்கிறது.

இதனால் சசிகுமார், ஜெய்யிடம் நாம் 80 காலகட்டத்தில் நடக்கும் கதையைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த சமயத்தில் விஜய் கிடையவே கிடையாது. அதனால் அவரைப் போல் இல்லாமல் நீங்கள் நீங்களாகவே நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு சசிகுமார் கஷ்டப்பட்டு ஜெய்யை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இப்படி ஒரு சுவாரஸ்யமான தகவலை தற்போது கூறியிருக்கும் ஜெய், பகவதி திரைப்படத்தில் பத்து நாட்கள் நான் விஜய் சாருடன் நடித்ததாலோ என்னவோ எனக்கு அவரைப் போலவே நடிக்க வருகிறது. என்னால் பாவம் சசிகுமார் தான் ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டார் என்று தெரிவித்திருக்கிறார்.

Trending News