பீஸ்ட் திரைப்படத்தால் சற்று மன உளைச்சலில் இருந்த விஜய் தற்போது தளபதி 66 திரைப்படத்தில் ஆர்வமாக நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படுவேகமாக நடைபெற்று வருகிறது.
குடும்ப சென்டிமென்ட் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்தப் படம் விஜய்யின் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை விஜய்யின் பிறந்த நாளுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி மற்றொரு சர்ப்ரைஸ் தயாராகியுள்ளது. அதாவது நாளை விஜய் அவருடைய பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அதை முன்னிட்டு ரசிகர்களுக்காக அவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற துப்பாக்கி திரைப்படம் ஒரு தியேட்டரில் ஸ்பெஷலாக திரையிடப்பட இருக்கிறது.
ஆனால் இது தமிழ்நாட்டில் கிடையாது. துப்பாக்கி திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் சுதர்சன் தியேட்டரில் மீண்டும் ஒளிபரப்ப இருக்கிறது. இந்தத் தகவல் தற்போது விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. ஏனென்றால் இதுவரை எந்த நடிகருக்கும் இப்படி ஒரு அங்கீகாரம் ஆந்திராவில் கிடைத்தது கிடையாது.
பொதுவாக விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா என்று எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். அந்த வகையில் இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதன் காரணமாகவும் அவருடைய திரைப்படத்திற்கு தெலுங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வரிசையில் முதல் முறையாக ஹைதராபாத்தில் தெலுங்கு இல்லாத ஒரு நடிகருக்காக இப்படி ஒரு ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ரஜினி, சூர்யா, அஜித் உள்ளிட்ட நடிகர்களுக்குக் கூட இப்படி ஒரு வரவேற்பு அங்கு கிடைத்தது கிடையாது. அந்த வகையில் விஜய் அக்கட தேசத்திலும் மாஸ் காட்டி வருகிறார்.