சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

தாலி தெரிய மாடர்ன் உடையில் ரொமான்ஸ் செய்த நயன்தாரா.. அடுத்தடுத்து வெளியிடும் ஹனிமூன் புகைப்படங்கள்!

7 வருடங்களாக காதலித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 9 ஆம் தேதி சென்னையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு, அதன் பிறகு நயன்தாராவின் சொந்த ஊரான கேரளாவிற்கு செல்கிறார்.

அதன்பின் தற்போது நயன்-விக்கி இருவரும் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்திருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘தாய்லாந்து வித் மை தாரம்’ என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் விக்கி-நயன் இருவரும் செம க்யூட்டாக இருப்பதுடன் நயன்தாரா மஞ்சக்கயிறு தவிர வேறு எந்த ஆபரணமும் அணியாமல் திருமண போல புது பொண்ணு போலவே தெரிகிறார்.

அதிலும் நயன்தாரா பிளாக் டி-ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், பிளாக் ஓவர்போர்டு போன்ற மாடர்ன் உடையில் இருந்த போதிலும் அவருடைய தாலிக்கயிறை மறைக்காமல் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் ஜோடியாக இருவரும் சந்தோசமாக ஹனிமூன் கொண்டாடுகின்றனர்.

இந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் சிங்கிள்ஸ் வெறுப்பேறி உள்ளனர். இருப்பினும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் ரசிகர்களும் இந்த புகைப்படத்தை பார்த்த பிறகு அவர்களைவிட சந்தோசத்தில் தங்களது வாழ்த்துக்களை இந்த புகைப்படத்திற்கு கீழே கமெண்ட்ஸ் வாயிலாக தெரிவிக்கின்றனர்.

ஹனிமூனை முடித்த பிறகு நயன்தாரா அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதால் தாய்லாந்தில் இருந்து வந்த பிறகு அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள கிளம்பிவிடுவார். நயன்தாரா நடிக்கும் புதிய படங்களில் விக்னேஷ் சிவன் ஒரு சில விதிமுறைகளை விதித்திருக்கிறார்.

nayan-cinemapettai1
nayan-cinemapettai

அதாவது கதாநாயகர்களுடன் நெருக்கமான காட்சிகளிலும், கவர்ச்சி உடைகளிலும், முத்தக் காட்சிகளிலும் நயன்தாரா சக நடிகர்களுடன் நடிக்கக்கூடாது என்பதை படத்தின் இயக்குனர்களிடம் தெரிவித்திருப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. அப்படி என்றால் இனி நயன்தாரா நடிக்கும் படங்களில் விக்னேஷ் சிவனின் தலையீடு நிச்சயமாக இருக்கும்.

nayan-vicky-cinemapettai
nayan-vicky-cinemapettai

Trending News