செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

நான் தான் எப்போதும் நம்பர் ஒன்.. விஜய்யை ஓரம்கட்டி மீண்டும் நிரூபித்த ரஜினி

தளபதி விஜய்யின் சம்பளம் தென்னிந்தியாவிலேயே முதலிடத்தைப் பெற்றிருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதனை முறியடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 169 திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அண்ணாத்த படத்தின் தோல்வியை அடுத்து, ரஜினிகாந்த் கண்டிப்பாக ஒரு வெற்றி படத்தை கொடுத்தாக வேண்டும் கட்டாயத்தில் உள்ளார். அதேபோல நெல்சன் திலீப்குமாரும் தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி தோல்வியடைந்த நிலையில், அவரும் தலைவர்169 திரைப்படத்தின் கதையை மும்முரமாக எழுதி வருகிறார்.

இரண்டு பேருமே கடந்த திரைப்படங்களில் தோல்வியடைந்த நிலையில், கண்டிப்பாக தலைவர் 169 திரைப்படத்தில் வெற்றியை கொடுத்துவிட வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ளனர். இதனிடையே இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதாகவும், அதற்காக செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம், கிட்டத்தட்ட 220 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளது. சமீபத்தில் வெளியான தென்னிந்திய நடிகர்களின் சம்பள பட்டியலில் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித்தின் சம்பளங்கள் இரண்டாம் இடத்தை பிடித்தது. ரஜினிகாந்தின் சம்பளம் 100 கோடியாக மட்டுமே இருந்து வந்தது. அதேபோல அஜித்தின் சம்பளமும் 100 கோடியாக இருந்தது

முதலிடத்தில் தளபதி விஜயின் சம்பளமாக 120 கோடி ரூபாய் இருந்து வந்தது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் என்றும் முதலிடம் தான் என்பதை நிரூபிக்கும் விதமாக தலைவர் 169 திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு 151 கோடி ரூபாய் சம்பளமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது. தற்போது இதைக்கேட்ட ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

தலைவர் 169 படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராய், ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியான நிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News