வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

வெளிநாடுகளை கலக்கிய முதல் தமிழ் படம்.. உலக அளவில் மாஸ் காட்டிய சூப்பர் ஸ்டார்

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வரும் ரஜினிகாந்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அதிக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல வருடங்களுக்கு முன்பிருந்தே இவர் தமிழ் திரையுலகின் வசூல் நாயகனாக இருந்து வருகிறார். அந்த வரிசையில் இவர் நடித்த அண்ணாமலை திரைப்படம் வெளி நாடுகளிலும் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்திருக்கிறது. 1992ல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

ரஜினி, குஷ்பூ, சரத்பாபு, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படத்தை பாலச்சந்தர் தன்னுடைய சொந்த தயாரிப்பில் தயாரித்திருந்தார். நண்பனால் ஏமாற்றப்படும் ரஜினி அதன் பிறகு எப்படி முன்னேறுகிறார் என்பதை பற்றிய கதைதான் இந்த படம்.

காமெடி, சென்டிமென்ட், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் 8 உலக நாடுகளின் திரையில் தினசரி காட்சிகளாக 25 நாட்களுக்கு மேல் ஓடியது.

அந்த வகையில் வெளிநாட்டை கலக்கிய முதல் தமிழ்த் திரைப்படமாகவும் இப்படம் இருக்கிறது. பொதுவாக அந்த காலகட்டத்தில் ஒரு தமிழ் திரைப்படம் வெளிநாடுகளில் அதுவும் இத்தனை நாட்களுக்கு ஓடி கலெக்சன் பார்ப்பது மிகப் பெரிய விஷயம்.

அப்படி ஒரு சாதனையைச் செய்த பெருமைக்குரியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்திற்கு பிறகு அவருடைய பல திரைப்படங்கள் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால்தான் அவர் தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

Trending News