வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கோர்ட், கேஸ் என்று அலைய முடியாது.. படக்குழுவுக்கு கண்டிஷன் போட்ட ரம்யா கிருஷ்ணன்

ரஜினியின் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை மிரட்டி இருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இப்படத்திற்குப் பிறகு இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்த படம் பாகுபலி. அந்தப் படத்தில் இவருடைய ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரம் பலராலும் கவரப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கிய குயின் வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த வெப்சீரிஸ் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த வெப் சீரிஸில் குழந்தைப்பருவ ஜெயலலிதா கதாபாத்திரத்தில் அனிகாவும், அதன்பின்பு இளமையான தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணனும் நடித்திருந்தார். அப்படியே ஜெயலலிதாவின் பிம்பத்தை ரம்யா கிருஷ்ணன் கண்முன் காட்டி இருந்தார்.

இந்த தொடரின் வெற்றியை அடுத்து தற்போது குயின் சீரிஸின் இரண்டாம் சீசன் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது ரம்யா கிருஷ்ணன் குயின் படக்குழுவுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளாராம்.

அதாவது இந்த தொடரில் சர்ச்சை அதிகம் இல்லாமல், சுவாரசியமாக எடுக்கவேண்டும். ஏனென்றால் பின்பு பிரச்சனையில் மாட்டிக் கொண்ட கோர்ட், கேஸ் என்று அலையாத படி என்னை நடிக்க வையுங்கள் என குயின் படக்குழுவிடம் ரம்யா கிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையும் பல சர்ச்சைகள் நிறைந்து இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதிலும் அவருடைய இறப்பு தற்போது வரை மர்மமாகவே உள்ளது. மேலும் சில விஷயங்களை தவறாக பிரதிபலித்தல் தொண்டர்கள் மத்தியில் இது பெரிய சர்ச்சையாக வெடிக்கும். இதனால் முன்கூட்டியே ரம்யாகிருஷ்ணன் படக்குழுவிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

- Advertisement -

Trending News